'சமூக வலைதளங்களில்’... ‘சர்ச்சைக்குரிய கருத்து பதிவிட்டால்’... ‘5 ஆண்டுகள் சிறை’... ‘அவசர சட்டத் திருத்தத்துக்கு ஒப்புதல் வாங்கிய மாநிலம்’...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாசமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தால், 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கக் கூடிய அவசர சட்டத்திற்கு கேரள ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
![5 year jail term for ‘offensive’ post: Kerala’s chilling law 5 year jail term for ‘offensive’ post: Kerala’s chilling law](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/5-year-jail-term-for-offensive-post-kerala-s-chilling-law.jpg)
இதுகுறித்து கேரள ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்ததாவது, இணையம் வழியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல்களிலிருந்து அவர்களை பாதுகாக்கும் வகையில், கேரள அரசு போலீஸ் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு உள்ளது. இந்த அவசர சட்டத் திருத்தத்துக்கு ஆளுநர் ஆரிஃப் முகமது கான் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
கொரோனா பாதிப்பிலிருந்து மீண்டு அண்மையில் பணிக்கு திரும்பிய நிலையில் அவர், இந்த அவசர சட்டத்தில் கையொப்பமிட்டுள்ளார் என கேரள ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும், தனிநபர் புகழுக்கு களங்கம் கற்பிக்கும் விதமாக சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்துவதை தடுப்பதற்காகவே இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
அதாவது இந்த அவசரச் சட்டத்தின் மூலம் சமூக வலைதளங்கள் வாயிலாக எந்த ஒரு நபரையும் உள்நோக்கத்துடன் மிரட்டல் அவமதிப்பு அல்லது அவதூறு செய்பவருக்கு, 5 ஆண்டுகள் சிறை அல்லது ரூபாய் 10,000 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்தோ தண்டனையாக விதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இது அங்கு சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த அவசரச் சட்ட திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
இந்தச் சட்டம் கருத்து சுதந்திரத்தை கட்டுப்படுத்துவதுடன் காவல்துறை கைகளில் அதிக அதிகாரங்களை குவிக்க உதவும் எனக் கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் எதிர்க்கட்சிகளின் இந்த குற்றச்சாட்டை கேரள முதல்வர் நிராகரித்துள்ளார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)