வைரலான ஹோட்டலின் 'பெயர்'... "இந்த 'கொரோனா'வ விடமாட்டீங்க போல... ஒரு எல்லை மீறித் தான்யா போறீங்க..."
முகப்பு > செய்திகள் > இந்தியாஉலகம் முழுவதும் இந்த ஆண்டு ஆரம்பத்தில் பரவிய கொரோனா தொற்று தொடர்ந்து உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது.
ஒரு பக்கம் பல நாடுகளில் கொரோனா தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல பகுதிகளில் கொரோனா தொடர்பான பெயர்களை பயன்படுத்தி பொது மக்கள் வைரலாகி வருகின்றனர். இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்த சமயத்தில் பிறந்த குழந்தைகளுக்கு பெற்றோர்கள் 'கொரோனா', சானிடைசர் உள்ளிட்ட கொடிய தொற்று தொடர்பான பெயர்களை வைத்தனர்.
அதே போல சிலர் தங்களது கடைகளுக்கும் கொரோனா குறித்த பெயரை வைத்து வைரலாக்கினர். தற்போது அதே போன்று சம்பவம் தான் அதிகம் ஹிட்டடித்துள்ளது. ஒடிசா மாநிலத்தின் பெர்ஹம்புர் என்னும் பகுதியில், உணவகம் ஒன்றிற்கு 'Antivirus Tiffin Center' என்ற பெயரை வைத்துள்ளனர். இந்த உணவகத்தின் புகைப்படங்கள் அதிகம் வைரலாகி வருகிறது.
இது தொடர்பான புகைப்படங்களுக்கு நெட்டிசன்கள் காமெடியாக பல கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த புகைப்படத்தில் உணவு உண்ணும் வாடிக்கையாளர்கள் யாரும் முகக்கவசம் அணியவில்லை. மேலும், சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை.
இதனை கலாய்க்கும் விதமாக, 'இந்த கடையில் நீங்கள் 'antivirus' தோசையை உண்டால் உங்களுக்கு அதிக எதிர்ப்பு சக்தி உருவாகும். நீங்கள் முகக்கவசம் அணிய வேண்டிய தேவையோ, அல்லது சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றில்லை' என நக்கலாக தெரிவித்துள்ளார். 'அவர் உணவு பொருட்களில் சானிடைசர்களை கலக்கவில்லை என நம்புகிறேன்' எனவும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.