“1000 அடியில தங்கம் இருக்கு!”.. ‘பேராசையில் நுழைந்த 3 திருடர்கள்’.. ‘கேஜிஎஃப்-ல் நடந்த பதைபதைப்பு சம்பவம்’!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Siva Sankar | May 14, 2020 10:36 AM

கோலார் தங்கச் சுரங்கத்தில் 1000 அடி ஆழத்திற்கு உள்ளே இறங்கி தங்கம் திருடுவதற்கு ஒரு கும்பல் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 men dead after trying to steal gold in 1000 feet under KGF

பெங்களூருவில் உள்ளது கோலார் தங்கச் சுரங்கம். இங்கு 1000 அடி ஆழத்திற்கு உள்ளே இறங்கி தங்கம் திருடுவதற்கு ஒரு கும்பல் முயன்றுள்ளது. அதுமட்டுமல்லாமல், தங்கத்தின் மீதான ஆசையில் உள்ளே நுழைந்த இந்த 3 பேர் கொண்ட கும்பல் சுரங்கத்துக்குள் ஆக்சிஜன் கிடைக்காமல் திணறியிருக்க வேண்டும்.

அதனால்தான் என்னவோ உள்ளே போன சில நேரத்துக்குள் மயங்கி விழுந்து 3 பேர் கொண்ட இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். ஆனால் நள்ளிரவு என்பதால் முதலில் 2 பேர் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில் மேலும் உயிரிழந்த மீதமிருக்கும் ஒருவரின் சடலத்தை மீட்பதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதோடு இறந்தவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தியும் வருகின்றனர்.