யாரோட ஃபேவரைட் சீரியல இப்போ பாக்குறது...? '3 சகோதரிகளுக்கும் செம சண்டை...' மூணு பேருமே கடைசியில 'இத' குடிச்சிட்டாங்க...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஉத்திரபிரதேச மாநிலத்தில் டி.வி சீரியல் பார்ப்பதில் சண்டை ஏற்பட்டதால் மூன்று சகோதரிகளும் பூச்சிக்கொல்லி மருந்து சாப்பிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்திர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மாவட்டத்தில் இருக்கும் பாலஸ்வா கிராமத்தில் ரீட்டா, ஷீட்டல் மற்றும் தனு என்ற மூன்று சகோதரிகளும் டி.வி பார்க்க அமர்ந்துள்ளனர். சிறிது நேரத்திற்கு பிறகு மூவருக்கும் இடையே தங்களுடைய விருப்பமான சீரியல் பார்க்க சண்டை ஏற்பட்டுள்ளது.
சண்டையில் ஆத்திரமடைந்த மூன்று சகோதரிகளும் கோதுமையில் அடிக்கப்படும் பூச்சிக்கொல்லியை சாப்பிட்டு தற்கொலை செய்துள்ளனர். இதனை அறிந்த சிறுமியின் தந்தை மற்றும் அக்கம்பக்கத்தினர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி ரீட்டா உயிரிழந்துவிட்டார். மேலும் ஷீட்டல் மற்றும் தனு ஆகியோர் உடல்நிலை மோசமாக இருப்பதாகவும், மேல் சிகிச்சைக்கு உயர் மையத்திற்கு அனுப்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சாதாரண டிவி சீரியலுக்கு உணர்ச்சிவசப்பட்டு பூச்சிக் கொல்லி மருந்து சாப்பிட சம்பவம் அக்கிராமத்தையே உலுக்கியுள்ளது.

மற்ற செய்திகள்
