"10 ரூபாய் நாணயம் .. செல்லும்.. செல்லும்.. செல்லும்" - மீறி வம்பு பண்ணா கம்பிதான் எண்ணனும்.! பறந்தது புது உத்தரவு.!
முகப்பு > செய்திகள் > இந்தியா10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என்றும் அதனை வாங்க மறுப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க சட்டத்தில் இடம் இருப்பதாகவும் தொடர்ந்து ரிசர்வ் வங்கி தெரிவித்து வருகிறது.

Also Read | திருப்பதி தேவஸ்தானத்துக்கு ரூ.1.02 கோடி நன்கொடையாக வழங்கிய முஸ்லீம் தம்பதி.. நெகிழ வைக்கும் பின்னணி..!
10 ரூபாய் நாணயம்
தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற இடங்களுக்கு பயணம் செய்பவர்கள் இந்த சிக்கலை எதிர்கொண்டிருக்கலாம். குறிப்பாக கிராம பகுதிகளில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்றே பலரும் நினைக்கின்றனர். பெட்டிக்கடை துவங்கி, பேருந்துகள் வரை யாருமே இந்த நாணயங்களை வாங்குவதில்லை. காரணம் கேட்டால் தங்களால் இதனை மாற்ற முடியாது எனவும், இவை செல்லாது எனவும் உருட்டுவதையே வாடிக்கையாக கொண்டிருக்கின்றனர் மக்கள். இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தாலும் நிலைமை இன்னும் சரியாகவில்லை என்பதே எதார்த்தமாக இருக்கிறது.
நாணயம் செல்லும்
இந்திய ரிசர்வ் வங்கி முதன்முதலில் கடந்த 2005 ஆம் ஆண்டு 10 ரூபாய் நாணயங்களை புழக்கத்தில் கொண்டுவந்தது. தாள்களில் அச்சடிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை விட அதிக காலம் பயன்படுத்திட முடியும் என்பதால் இந்த 10 ரூபாய் நாணயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதனை தொடர்ந்து 14 விதமான 10 ரூபாய் நாணயங்கள் இந்திய ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்டிருக்கின்றன. இவற்றில் ஒவ்வொரு வகை 10 ரூபாய் நாணயமும் வித்தியாசமான முறையில் வடிவமைக்கப்பட்டவை. உதாரணமாக ஒரு வகை 10 ரூபாய் நாணயத்தில் ரூபாய் சின்னம் (₹)இருக்கும் மற்றொன்றில் ரூபாய் சின்னம்(₹)இருக்காது. ஆகவே ரூபாய் சின்னம் இல்லாத நாணயங்கள் செல்லாது என்ற முடிவுக்கு மக்களே வந்துவிட்டனர். காலப்போக்கில் எந்த 10 ரூபாய் நாணயங்களையும் மக்கள் வாங்க யோசிக்கத் துவங்கிவிட்டனர்.
தண்டனை என்ன?
பொதுவாக, இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை செல்லாது என கூறுவதோ அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ வாங்கவோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும். இந்திய தண்டனைச் சட்டம் 124A வின் படி ஒருவர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அது குற்றமாகும். அதன்படி இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட எந்தவொரு நாணயங்களை வாங்க மறுப்பவருக்கும் மூன்று வருட சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மேலும், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீதும் இந்த சட்டத்தின்படி புகார் அளிக்க இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read | "பசியோட யாரும் இருக்கக்கூடாது".. ஏழை மக்களுக்கு இலவச உணவு.. உலகத்தையே திரும்பி பார்க்க வச்ச துபாய் அரசர்..!

மற்ற செய்திகள்
