டிகிரி முடிச்சாச்சா.. ஆர்பிஐ வங்கியில் வேலை.. 950 காலிப்பணியிடம்.. இப்பவே அப்ளை பண்ணுங்க!
முகப்பு > செய்திகள் > இந்தியாரிசர்வ் வங்கியில் துணை அதிகாரி(RBI Assistant Recruitment 2022) பதவிக்கான 950 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
ரிசர்வ் வங்கியில் துணை அதிகாரி அளவில் நாடுமுழுவதும் 950 காலியிடங்கள் உள்ளன. அதை நிரப்புவதற்கான அறிவிக்கையை ஆர்பிஐ தனது இணையதளத்தில் இன்று வெளியிட்டுள்ளது. விண்ணப்பத்தை பூர்த்தி செய்து ஆன்-லைனில் மூலம் அனுப்ப வேண்டும். கடைசி தேதி 2022, மார்ச் 8ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பிக்க விரும்புவோர் இன்றே ரிசர்வ் வங்கி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தப் பதவிக்கான முதல்நிலைத் தேர்வு 2022, மார்ச் 26 மற்றும் 27ம் தேதி ஆன்-லைன் மூலம் நடக்கும். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் மட்டுமே மற்ற பிற தேர்வுகளை எழுதமுடியும். பதவிக்கான மெயின் தேர்வு மே மாதம் நடக்கும் இந்தியாவில் சென்னை, பெங்களூரு, அகமதாபாத், போபால், சண்டிகர், பாட்னா, ஜெய்ப்பூர், ஐதராபாத் உள்ளிட்ட நகரங்களில் வசிப்போர் மட்டுமே இந்தப் பதவிக்கு விண்ணபிக்க முடியும்.
தேர்வு நடக்கும் தேதி
துணை அதிகாரிக்கான ஆன்-லைன் விண்ணப்பம் இன்று தொடங்கியுள்ள நிலையில், மார்ச் 8 ம்தேதிக்குள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். முதல் நிலைத் தேர்வு 2022, மார்ச் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் ஆன்-லைன் மூலம் நடக்கும். பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கு தேர்வுக்கட்டணம் ரூ.50, பொதுப்பிரிவினர், பொருளாதார ரீதியாக பின்தங்கியோருக்கு ரூ.450 கட்டணம் ஆகும்.
கல்வி தகுதி
விண்ணப்பிப்போர் வயது 20 முதல் 28வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர் இளநிலை பட்டதாரியாகவும், 50 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கம் குறித்த அறிவும், புரிதலும் இருத்தல் அவசியம். பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் 33 வயது வரை விண்ணப்பிக்கலாம். ஓபிசி பிரிவினர் 31 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். இது தவிர முன்னாள் ராணுவ வீரர்கள், கணவனை இழந்த பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வயது தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
மாத ஊதியம்
ரிசர்வ் வங்கியின் துணை அதிகாரிக்கு தேர்வாகிவிட்டால் மாதம் தொடக்கநிலையில் ரூ.36,091 பெறலாம். rbi.org.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆன்-லைனில் மட்டுமே அனுப்ப வேண்டும். ஆன்லைன் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.