இனிமேல் 'கூகுள் பே'ல அதெல்லாம் 'சேவ்' பண்ணக் கூடாது...! - புதிய 'கட்டுப்பாடுகள்' குறித்து கூகுள் நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > தொழில்நுட்பம்பணம் பரிமாற்றம் செய்யும் செயலிகளில் இனி பொதுமக்களின் கார்டு விவரங்களை சேமிக்க கூடாது என்ற இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கட்டுப்பாடுகள் குறித்து கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.

நவீன உலகில் மக்கள் பொதுவாக பணத்தை உபயோகப்படுத்துவத்தை விட டிஜிட்டல் செயலிகளையே அதிகம் பயன்படுத்துக்கின்றனர். கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணத்தை பிறருக்கு அனுப்புவது மிகவும் எளிதாகி விட்டது.
இந்நிலையில் கூகுள் பே தங்கள் செயலியில் சில முக்கிய மாற்றங்கள் செய்ய உள்ளதாகவும் அவை வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் செயல்பாட்டிற்கு வரும் என கூறப்படுகிறது. அதில் வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை இனி கூகிள் பெண் சேமிக்க முடியாது என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
அதாவது மக்களின் கார்டு நம்பர், எக்ஸ்பையரி தேதி போன்றவற்றை கூகுள் பே செயலியில் சேமித்து கொண்டு முன்பை போன்று பணத்தை ட்ரான்ஸ்பர் செய்ய இயலாது. இதற்கு காரணம், இந்திய ரிசர்வ் வங்கியானது (ஆர்பிஐ) பேமென்ட் அக்ரிகேட்டர்கள் (பிஏ) மற்றும் பேமென்ட் கேட்வேகள் (பிஜி) சில புதிய வழிகாட்டுதல்களை கூறியுள்ளது.
அதில் இந்திய ரிசர்வ் வங்கியின் புதிய கார்டு ஸ்டோரேஜ் ஒழுங்குமுறைகளின் படி எந்தவொரு நிறுவனமும், கார்டு நெட்வொர்க்கும் வாடிக்கையாளர்களின் கார்டு விவரங்களை சேமிக்க கூடாது என அறிவித்திருந்தது.
இதனால் இனி கூகிள் பே பயனாளர்களின் விவரங்கள் இனி செயலியில் இருக்காது என கூறியுள்ளது. இந்த புதிய நடைமுறையால் பல நிறுவனங்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
ஏனென்றால் இந்த மாற்றம் ஒருமுறை மட்டும் சப்ஸ்கிரிப்ஷன் செய்யும் யூசர்களுக்கும் இது சிரமத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. 2022-ஆம் ஆண்டு முதல் கூகுள் பே செயலியில் இருக்க நீங்கள் ஒரு முறையாவது உங்களின் கார்டு விவரங்களை அதில் ரீ-என்டர் செய்ய வேண்டும் என்பதும் கட்டாயம்.

மற்ற செய்திகள்
