'அப்ரைசலுக்கு வேட்டு வைத்த கொரோனா'... 'மாச சம்பளக்காரங்க, பேச்சிலர்ஸ் கவனத்திற்கு'... 'இந்த வருஷம் எப்படி'?... ரிசர்வ் வங்கி ஆய்வில் கணிப்பு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்உலகம் முழுவதும் கொரோனாவின் ஆட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், நடப்பு நிதி ஆண்டின் பொருளாதார நிலை குறித்து ரிசர்வ் வங்கி ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.

மார்ச் மாதம் என்றாலே பல நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு ஊதிய உயர்வு என்பது வழங்கப்படும். வருடம் முழுவதும் கடுமையாக உழைப்பவர்களுக்கு மார்ச் மாதம் வரும் போது, நாம் பட்ட கஷ்டங்களுக்கு எல்லாம் பலன் கிடைக்கும் எனப் பெரிதும் நம்பி இருப்பார்கள். ஆனால் அப்படி நம்பி இருந்த பலரின் கனவில் பெரிய அணுக்குண்டைத் தூக்கிப் போட்டது கொரோனா என்ற வைரஸ். கொரோனா காரணமாகப் பொருளாதாரம் கடுமையாகச் சரிந்துள்ள நிலையில், ஊரடங்கு இன்னும் அமலில் உள்ளது.
இந்நிலையில் பொருளாதார சரிவைக் காரணம் காட்டி பல்வேறு நிறுவனங்கள் ஊதிய உயர்வு இந்த வருடத்திற்கு கிடையாது என அறிவித்துள்ளது. அதோடு நிறுவனம் வழங்கும் பல்வேறு சலுகைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. இந்த சூழ்நிலையில் நடப்பு நிதியாண்டில் பொருளாதாரம் 1.5% வீழ்ச்சியடையும் என ரிசர்வ் வங்கி நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால் உள்நாட்டு உற்பத்தியை அதிகரித்து, ஏற்றுமதியைப் பெருக்க அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
ரிசர்வ் வங்கி சார்பில் பொருளாதார நிலையைக் கணக்கீடு செய்ய 5,076 குழுக்கள் கொண்ட அமைப்புடன் சேர்ந்து ரிசர்வ் வங்கி ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. அதில் நடப்பு நிதி ஆண்டில் நடுத்தர மக்கள் மற்றும் நுகர்வோரின் வாங்கும் திறன் குறையும் எனத் தெரியவந்துள்ளது. இதனால் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் எனத் தெரியவந்துள்ளது. இது உள்நாட்டு உற்பத்தியான ஜிடிபியை பாதிக்கும். இதனால் ஜிடிபி 1.5% சரிவடையும் எனத் தெரியவந்துள்ளது.
அடுத்த ஆண்டை பொறுத்தவரை ஜிடிபி 7.2% வளர்ச்சி அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியாரின் இறுதி நுகர்வு செலவு 0.5% சரியும் எனவும், அடுத்த நிதி ஆண்டில் 6.9% வரை உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பொருளாதார வல்லுநர்கள், ''மாத சம்பளக் காரர்கள், நடுத்தர குடும்பத்தில் உள்ளவர்கள், சேமிப்பை அதிகப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் சென்னை போன்ற பெரு நகரங்களில் தனியாகத் தங்கி வேலைக்குச் செல்லும் இளைஞர்கள், தங்களின் தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டும்'' எனவும் கூறியுள்ளார்கள்.

மற்ற செய்திகள்
