'இந்த மாதிரி மனுசங்க இருக்கனால தான்...' 'நாட்டுல மழை பெய்யுது...' 'ஒரு ரூபாய்க்கு ட்ரீட்மெண்ட்...' - மக்கள்கிட்ட ஒரு ரூபாய் வாங்குவதற்கு மருத்துவர் சொன்ன காரணம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாஒடிசாவில் எளிய மக்களுக்கு உதவும் வகையில் ரூ.1 மருத்துவ சேவையை அளித்து வருகிறார் மருத்துவர் ஷங்கர் ராம்சந்தானி.

ஒடிசாவின் சாம்பல்பூர் மாவட்டத்தில் புர்லா பகுதியில் இயங்கி வரும் VIMSAR மருத்துவ கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வரும் மருத்துவர் ஷங்கர் ராம்சந்தானி.
இவர் தன்னுடைய கல்லூரி நேரம் போக மீதி நேரத்தை மக்கள் சேவையில் ஈடுபட வேண்டும் என்ற தன் நீண்ட நாள் கனவின் அடிக்கல்லாக தான் ஒரு கிளினிக்கை உருவாக்கியுள்ளார்.
இதுகுறித்து கூறும் மருத்துவர் ஷங்கர் ராம்சந்தானி, 'எனக்கு சிறுவயதிலிருந்தே மருத்துவர் ஆக வேண்டும். சிறந்த மருத்துவத்தை பெற முடியாத மக்களுக்கு உதவ வேண்டும் என்று ஆசை. அதன்படியே நான் மருத்துவர் ஆனேன். ஆனால் நான் VIMSAR -இல் பணிக்கு சேர்ந்தபோது எனது சீனியர் ரெசிடெண்ட் பதவியின் காரணத்தினால் மக்களுக்கான மருத்துவமனையை தொடங்க முடியவில்லை.
இப்போது தான் உதவி பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளதால் நான் தனியாக கிளினிக் தொடங்கலாம். என்னுடைய நீண்ட நாள் ஆசையை இப்போது நிறைவேற்றியுள்ளேன்.
இந்த கிளினிக்கை வாடகை கட்டடத்தில் தான் தொடங்கியுள்ளேன். என்னுடைய ஓய்வு நேரத்தின் போது காலை மற்றும் மாலை நேரங்களில் தலா ஒரு மணி நேரம் மருத்துவம் பார்க்க ஒதுக்கியுள்ளேன்.
நான் மக்களிடம் ஒரு ரூபாய் வசூலிக்க காரணம், நான் அவர்களிடம் இலவசமாக மருத்துவம் பார்க்கவில்லை என்பதை அவர்கள் உணரவும், என்னிடம் சந்தேகம் இருந்தால் கேட்பதற்கும் தான். நான் மக்களின் சேவகன்' என நெகிழ்ச்சியுடன் சொல்கிறார் மருத்துவர் ஷங்கர் ராம்சந்தானி.
அந்த பகுதியில் மருத்துவர் ஷங்கர் ராம்சந்தானியை அனைவரும் மக்கள் மருத்துவர் என செல்லமாகவும், புனைப்பெயராகவும் அழைக்கின்றனர்.

மற்ற செய்திகள்
