‘ரூ.10 மட்டும் குடுங்க போதும்’!.. அந்த கஷ்டத்தை நானும் அனுபவிச்சிருக்கேன்.. ஒரே பதிலால் உருக வைத்த இளம் மருத்துவர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கிருஷ்ணகிரி அருகே 10 ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் இளம் டாக்டருக்கு பலரும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே உள்ள மஹாராஜா கடை பகுதியை சேர்ந்தவர் டாக்டர் லோகேஷ். இவர் கடந்த 8 ஆண்டுகளாக அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வேப்பனஹள்ளியில் மருத்துவமனை ஒன்றை லோகேஷ் தொடங்கியுள்ளார். கிராமபுற ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 24 மணிநேரமும் இந்த மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
10 படுக்கைகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் அனைவரிடம் கன்சல்ட்டிங் பீஸாக 10 ரூபாய் மட்டுமே டாக்டர் லோகேஷ் வாங்குகிறார். இதுகுறித்த பேனர் ஒன்றையும் தனது அறையில் பொருத்தியுள்ளார். நாள் ஒன்றுக்கு 150-க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வருவதால், மருத்துவமனையை விரிவாக்கம் செய்ய லோகேஷ் திட்டமிட்டுள்ளார். நோயாளிகளுக்கு மருந்து வாங்க பணமில்லை என்றாலும், தன்னால் முடிந்த உதவியை செய்து வருவதாக அவர் தெரித்துள்ளார்.
இதுகுறித்து தெரிவித்த டாக்டர் லோகேஷ், ‘அனைத்து மருத்துவர்களும் மருத்துவ பணியை சேவையாக எடுத்துக்கொள்ள வேண்டும். நானும் சிறு வயதில் மருத்துவ செலவுக்கு பணமில்லாமல் கஷ்டப்பட்டேன். அதனால் என்னால் முடிந்த வரை ஏழைகளுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் இந்த மருத்துவமனையை தொடங்கியுள்ளேன். பணம் இல்லாத காரணத்தால் யாரும் சிகிச்சையை தள்ளிப்போடக் கூடாது. இதற்காகவே இந்த மருத்துவமனையை நான் தொடங்கியுள்ளேன்’ என அவர் தெரிவித்துள்ளார். மக்களிடம் 10 ரூபாய் மட்டுமே கன்சல்ட்டிங் பீஸா வாங்கிக் கொண்டு, மருத்துவ சேவை செய்து வரும் இளம் டாக்டர் லோகேஷுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

மற்ற செய்திகள்
