"கோவில்'ல திருடிட்டு போறதுக்கு முன்னாடி.." திருடன் செஞ்ச ஒரே ஒரு சம்பவம்.. இணையத்தில் வைரலாகும் வீடியோ
முகப்பு > செய்திகள் > இந்தியாஇன்றைய உலகில், அனைவரும் சமூக வலைத்தளங்களில் அதிக நேரத்தினை செலவிட்டு வரும் நிலையில், நாளுக்கு நாள் புது புது வீடியோக்கள் அல்லது வினோத நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் வைரல் ஆவதை காண முடியும்.
Also Read | Chess Olympiad 2022 நிறைவு நாள்.. சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து பார்த்த முதல்வர்..
அதிலும் குறிப்பாக, சில சிசிடிவி காட்சிகள் கூட அதிக அளவில் பரபரப்பை உண்டு பண்ணும். திருட்டு அல்லது அசம்பாவிதம் தொடர்பான சம்பவங்களின் போது, பெரிதும் ஆதாரமாக இருக்கும் சிசிடிவி காட்சிகளில், நிறைய வினோதமான சம்பவங்கள் கூட அரங்கேறுவது உண்டு.
சில தினங்களுக்கு முன்பு கூட, திருடர்கள் இரண்டு பேர், சிசிடிவி கேமராவுக்கு முத்தமிட்டு செல்லும் வீடியோ காட்சிகள், இணையத்தில் அதிகம் வைரலாகி இருந்தது.
இந்நிலையில், தற்போது திருடர் ஒருவன் திருடுவதற்கு முன்பாக, செய்யும் காட்சி ஒன்று சிசிடிவியில் பதிவாகவே, அது தற்போது இணையத்திலும் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் பகுதியை அடுத்து சுக்கா என்னும் கிராமம் அமைந்துள்ளது. அங்கே அமைந்துள்ள கோவில் ஒன்றில், சில தினங்களுக்கு முன்பு திருடன் ஒருவன் நுழைந்துள்ளான். இது தொடர்பாக வெளியான வீடியோவின் படி, சட்டை அணியாத திருடன் ஒருவன், தனது முகத்தை மறைத்து வைத்த படி, கோவில் கர்டனை நீக்கி விட்டு, கோவிலின் உள் கருவறைக்குள் நுழைகிறார்.
தொடர்ந்து, அங்கே பெரிய தேவியின் சிலை இருப்பதைக் காண்கிறார். உடனடியாக, கையெடுத்து ஒரு சில வினாடிகள் தனது முன்னிருக்கும் தெய்வ சிலையை வணங்கி விட்டு, அங்கிருந்த உண்டியல் மற்றும் விலை மதிப்புள்ள பொருட்களையும் அவர் திருடி செல்கிறார். கோவிலிலுள்ள பொருட்கள் திருட்டு போன நிலையில், இது தொடர்பான சிசிடிவி காட்சியை கைபற்றியுள்ள போலீசார், திருடன் யார் என்பதை கண்டுபிடிக்க தீவிர விசாரணனையையும் மேற்கொண்டு வருகின்றனர்.
திருடுவதற்கு முன்பாக, தெய்வத்தை கைகூப்பி வணங்கி, பின்னர் திருடி சென்ற திருடன் தொடர்பான வீடியோ குறித்து, நெட்டிசன்கள் பலரும் பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
Also Read | "ஆத்தாடி, இந்த ராக்கி கயிறு விலை என்ன இவ்ளோ இருக்கு?!.." கேட்டதும் மிரண்டு போகும் சகோதரிகள்..