"ஆத்தாடி, இந்த ராக்கி கயிறு விலை என்ன இவ்ளோ இருக்கு?!.." கேட்டதும் மிரண்டு போகும் சகோதரிகள்..
முகப்பு > செய்திகள் > இந்தியாரக்ஷா பந்தன் என்பது, ஒரு சகோதரனுக்கும், சகோதரிக்கும் இடையே உள்ள அன்பை வெளிப்படுத்தும் ஒரு நாளாக கொண்டாடப்படுகிறது.
Also Read | Chess Olympiad 2022 நிறைவு நாள்.. சிவமணியுடன் சேர்ந்து டிரம்ஸ் வாசித்து பார்த்த முதல்வர்..
ஒரு சமுதாயத்திற்கு உட்பட்ட பண்டிகை என இல்லாமல், இந்த ரக்ஷா பந்தனை இந்தியாவில் உள்ள அனைவரும், எந்தவித பாகுபாடுமின்றி கொண்டாடியும் வருகிறார்கள்.
அதே போல, ரத்த பந்தம் அல்லது குடும்ப பந்தம் மூலம் மட்டுமே சகோதர, சகோதரிகளாக இருக்கிறார்கள் என்பதை விட, மதம், மொழி கடந்து, சகோதர பண்பினை காண்பவர்களும் இந்த ரக்ஷா பந்தன் தினத்தில், தனது அன்பினை வெளிப்படுத்தி கொண்டாடவும் செய்கிறார்கள்.
அது மட்டுமில்லாமல், இந்த தினத்தில் தனது சகோதரர் அல்லது சகோதரராக காணும் ஒருவருக்கு, ராக்கி கயிறு கட்டி விடுவதும் ஒரு வழக்கமாக உள்ளது. பாசத்துடன் சகோதரி கட்டி விடும் இந்த கயிறின் மூலம், அணியும் நபரை அது காக்கும் என்றும் ஒரு நம்பிக்கை உள்ளது. தனது சகோதரனுக்கு ராக்கி கயிறு ஒன்றை சகோதரி கட்டும் நிலையில், அவரும் தனது சகோதரரிடம் இருந்து ஏதாவது அன்பை வெளிப்படுத்தும் பரிசினையும் எதிர்பார்ப்பார்கள்.
அந்த வகையில், இந்த ஆண்டு ரக்ஷாபந்தன் தினம் நாளை (ஆகஸ்ட் 11) கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக, நாடு முழுவதும் ராக்கி கயிறு விற்பனையும் பல இடங்களில் அமோகமாக நடைபெற்று வருகிறது. அது மட்டுமில்லாமல், பெண்கள் பலரும் தங்களின் சகோதரருக்கு வித விதமான ராக்கி கயிறினை கட்டி விடவும் தேடி தேடி வாங்கி வருகின்றனர்.
அந்த வகையில், குஜராத்தின் சூரத் பகுதியில் உள்ள ஒரு கடையில் உள்ள ராக்கி கயிறு, பலரையும் வாயை பிளக்க வைத்துள்ளது. இந்த கடையில் நூல் ராக்கியில் தொடங்கி, வெள்ளி, பிளாட்டினம், தங்கம் மற்றும் வைரம் உள்ளிட்டவை கொண்டும், ராக்கி கயிறு விற்பனைக்காக தயார் செய்து வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இந்த கடையில் உள்ள ராக்கி கயிறு ஒன்று, 5 லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருவது தான், பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
பெரும்பாலும், நூல் மூலம் உண்டான ராக்கி கயிறினை பெண்கள் பலரும் தங்களின் சகோதரர்களுக்கு அணிவிக்கும் நிலையில், 5 லட்ச ரூபாய்க்கு உருவாக்கப்பட்டுள்ள ராக்கி கயிறு தொடர்பான புகைப்படங்கள், இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.