"நடந்ததை வெளில சொல்லிடுவேன்".. நண்பனை மிரட்டிய இளைஞர்... அன்று இரவே போலீசுக்கு வந்த மர்ம போன்கால்.. மெசேஜை பாத்து அதிகாரிகள் ஷாக்.!
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்திய பிரதேசத்தில் நெருக்கமாக இருந்ததை வெளியே சொல்லிவிடுவேன் என மிரட்டிய நண்பரை இளைஞர் கொலை செய்துவிட்டு, தனது உயிரையும் மாய்த்துக்கொண்ட சம்பவம் அப்பகுதி முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read | தாங்க முடியாத வறட்சி.. மழை வரணும்னு மக்கள் நடத்திய வினோத திருமணம்.. இது புதுசால்ல இருக்கு..?
மத்திய பிரதேச மாநிலத்தின் பேதுல் பகுதியில் இயங்கிவரும் நர்சரி பள்ளியில் ஒருவரது சடலம் கிடப்பதாக கடந்த சனிக்கிழமை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்துசென்ற காவல்துறையினர் அவரது உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அது நர்சரி பள்ளியை நடத்திவந்த 32 வயது நபர் தான் என்பதை கண்டறிந்திருக்கின்றனர்.
திடுக்கிடும் உண்மை
அதனை தொடர்ந்து, அந்த பள்ளி வளாகத்தில் 3 நாள் கழித்து இன்னொரு நபரின் உடல் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்திருக்கிறது. உடனடியாக, பள்ளிக்கு சென்ற போலீசார் சடலத்தை ஆய்வு செய்ததில், அது நாக்பூரை சேர்ந்த இளைஞர் என்பது தெரியவந்திருக்கிறது. மேலும், கடந்த 3 நாட்களாக அவரை காணவில்லை என காவல்துறையில் ஏற்கனவே புகாரும் பதியப்பட்டிருக்கிறது.
இதனால் குழப்பமடைந்த போலீஸ் அதிகாரிகள், நாக்பூர் இளைஞரின் செல்போனை சோதனை செய்திருக்கிறார்கள். அப்போதுதான் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. இறந்துபோன இருவருக்குள்ளும் வெகுகாலமாக நெருக்கமான உறவு இருந்ததாக தெரிவித்துள்ள காவல்துறையினர், நாக்பூரை சேர்ந்த இளைஞர் தங்களுக்கு இடையேயான உறவை பற்றி வெளியே சொல்லிவிடுவேன் என நண்பரை மிரட்டியது செல்போன் chat மூலமாக தெரியவந்திருப்பதாக கூறியுள்ளனர்.
போன்கால்
இதுபற்றி பேசிய போலீஸ் துணைப்பிரிவு அதிகாரி ரோஷன் ஜெயின்,"வெள்ளிக்கிழமை இரவு, நாக்பூரைச் சேர்ந்த நபர், காவல்துறை அவசர அழைப்பு எண்ணான 100க்கு போன் செய்து, தான் தாக்கப்பட்டதாகக் கூறினார். இருப்பினும், அவர் முகவரியைப் பகிரவில்லை அதற்குள் அழைப்பைத் துண்டித்துவிட்டார்" என்றார். இதனை தொடர்ந்து, தன்னை மிரட்டிய நண்பரை கொலை செய்துவிட்டு தனது உயிரையும் மாய்த்துக்கொண்டிருக்கிறார் அந்த இளைஞர்.
நாக்பூரை சேர்ந்த இளைஞர் பல ஆண்களுடன் தொடர்பில் இருந்ததும், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது. இந்நிலையில், இருவருக்கும் வேறு ஏதேனும் அழுத்தம் இருந்ததா? என்ற கோணத்திலும் காவல்துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050.