சென்னை: திகில் நிறைந்த அண்ணா நகர் 18-வது ரோடு.. பெண் போட்ட பரபரப்பு பதிவு.. பீதியில் உறைந்த மக்கள்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் பல முக்கியமான இடங்களில், திருட்டு நிகழும் சம்பவங்கள் குறித்து, நெட்டிசன்கள் பலரும் தெரிவித்து வரும் சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாநகரை பொறுத்தவரையில், அதிக வீட்டு மனைகள் விற்கப்படும் ஒரு இடம் என்றால் அது அண்ணாநகர் தான். அதே போல, பல பணக்கார மக்களும் அண்ணாநகரில் தான் அதிகம் வீட்டு மனைகளை வாங்கி வசித்து வருகின்றனர்.
சென்னையின் அவுட்டரில் அமைந்துள்ள பகுதிகளில் உருவாகி வரும், வீட்டு மனைகளை விற்க வேண்டும் என்றால் கூட, சென்னையின் அடுத்த அண்ணா நகர் என்று குறிப்பிட்டு தான் விற்பனை செய்கிறார்கள்.
இந்நிலையில், அண்ணா நகர் உள்ளிட்ட சென்னையின் பல முக்கியமான பகுதியிலுள்ள மக்கள் பலரும் கடுமையான பீதியில் உறைய வைக்கும் ஒரு சம்பவம் தான் அடுத்தடுத்து நடந்து வருகிறது.
அண்ணா நகரில் நடந்த திருட்டு
அண்ணா நகர் 18 ஆவது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய கணவரின் காரில் நடந்த திருட்டு குறித்து, பேஸ்புக்கில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கடந்த வாரத்தில், அண்ணா நகர் 18 ஆவது மெயின் ரோடு பகுதியில் நின்ற எனது கணவரின் காரில், 4 பேர் கொண்ட கும்பல், கண்ணாடியை உடைத்து திருட்டில் ஈடுபட்டுள்ளது. அதில் இருந்த கணவரின் லேப்டாப், பர்ஸ் மற்றும் பணத்தினை அந்த கும்பல் திருடிச் சென்றுள்ளது. மிகவும் பிஸியான ஒரு சாலை அருகே நின்ற காரில், தைரியமாக திருடிச் சென்றுள்ளனர்.
தயவு செய்து அனைவரும் கவனமாக இருங்கள். விலையுயர்ந்த பொருட்களை காரில் யாரும் விட்டுச் செல்ல வேண்டாம். அதே தினத்தில், இன்னும் ஒன்றிரண்டு இடங்களில் திருட்டு நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. லேப்டாப்பை எந்த வகையிலாவது Trace செய்ய முடிந்தால் சொல்லுங்கள். ஏனென்றால், அதில் நிறைய அதிகாரபூர்வ தகவல்கள் உள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
அரண்டு போன சென்னைவாசிகள்
இது பற்றிய பதிவு, சென்னை வாசிகள் மத்தியில் அதிகம் பயத்தை ஏற்படுத்தியது. அண்ணா நகர் 18 ஆவது மெயின் ரோடு என்பது மிகவும் பிஸியான பகுதி ஆகும். அங்கு எப்படி திருட்டு நடைபெறுகிறது என ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். அங்குள்ள சிசிடிவி காட்சிகளை சோதித்து பார்க்கவும் அறிவுறுத்தியுள்ளனர். இதற்கு பதிலளித்த அந்த பெண், அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றும், போலீசாரிடம் இதுபற்றி புகாரளித்துள்ளோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். இது ஒருபுறம் இருக்க, சென்னையின் வெவ்வேறு பகுதிகள் சிலவற்றில், இது போன்று நடக்கும் திருட்டினையும் அச்சத்துடன் சிலர் குறிப்பிட்டுள்ளனர்.
துணிச்சலுடன் திருட்டு
தி. நகர் பகுதியில், வீட்டு காம்பவுண்டுக்குள் நின்ற கார் ஒன்றினை திறந்து, லேப்டாப் உள்ளிட்ட பிற பொருட்களை திருடிச் சென்றதாக ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மற்றொருவர், கிழக்கு மாம்பலம் பகுதியில், நண்பரின் புல்லட் பைக்கினை திருடிச் சென்றுள்ளதையும் தெரிவித்துள்ளார். இப்படி சென்னை மக்கள் பலரும், பல நெரிசல் மிகுந்த பகுதியில் துணிச்சலுடன் திருட்டில் ஈடுபடுவதை பற்றி பேஸ்புக்கில் குறிப்பிட்டு வருகின்றனர்.
ஒரு கும்பல் இருக்கலாம்?
நிச்சயம் இப்படி பல இடங்களில் ஒரே நேரத்தில் திருட்டு நிகழ்கிறது என்றால், ஒரு பெரிய குழு இதன் பின்னர் இருக்கலாம் என்றும் சிலர் தெரிவித்து வருகின்றனர். அடுத்தடுத்து தினங்களில், சென்னையின் பல முக்கியமான பகுதிகளில் ஒரே மாதிரியான வகையில் திருட்டு நிகழ்ந்து வருவதால், அரண்டு போய் கிடக்கின்றனர் சென்னை மக்கள்.
இதற்காக காவல் துறை தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அவர்கள் குறிப்பிட்டு வருகின்றனர். அண்ணா நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள இடங்களில் இருக்கும் வீட்டு மனைகளை வாங்க பலரும் முனைப்பு காட்டி வரும் நிலையில், அப்படிப்பட்ட ஒரு இடத்தில் நடந்த திகிலூட்டும் சம்பவம், அவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
