"'கறி'ல கை வெச்ச கேப்'ல,.. நமக்கே கெடா வெட்டிட்டாய்ங்களே.." 3 லட்ச ரூபாய் 'அபேஸ்'.. இறுதியில் காத்திருந்த 'ட்விஸ்ட்'!!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Ajith Kumar V | Dec 17, 2021 09:10 PM

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த அழகிரி சாமி (வயது 62) என்பவர், அரசு பஸ் கண்டக்டராக பணிபுரிந்து ஒய்வு பெற்றவர்.

Madurai Retd condutcor missed 3 lakhs rupees police finds

இந்நிலையில், சமீபத்தில் அழகிரி சாமி, மதுரை பாண்டி கோவிலுக்கு வந்துள்ளார். அந்த சமயத்தில், சுமார் 3 லட்சம் ரூபாய் வரை தனது கையில் வைத்திருந்தார். அப்போது, அங்குள்ள மண்டபம் ஒன்றில், காதுகுத்து நிகழ்ச்சிக்காக, இலவச அன்னதானம் வழங்கப்பட்டது. அசைவ சாப்பாட்டின் மேல் கொண்ட பிரியம் காரணமாக, அங்கு உணவருந்தச் சென்ற அழகிரி சாமி, சாப்பிட்டு முடித்து விட்டு, ஞாபக மறதியின் காரணமாக, மண்டபத்திலேயே பணத்தை விட்டு விட்டு, விருதுநகர் சென்று விட்டார்.

Madurai Retd condutcor missed 3 lakhs rupees police finds

இதனையடுத்து, பணப்பை தொலைந்து போனது திடீரென அழகிரி சாமிக்கு ஞாபகம் வந்துள்ளது. இதனால், பதறிப் போன அவர், மீண்டும் பாண்டி கோவிலுக்கு வந்து, பணத்தைத் தேடிப் .பார்த்துள்ளார்.  அங்கு எங்கும் கிடைக்காத நிலையில், சற்றும் தாமதிக்க விரும்பாத அவர், மாட்டுத்தாவணி போலீஸ் நிலையத்தில் புகாரளித்துள்ளார். தொடர்ந்து, அழகர் சாமி பணப்பையைத் தொலைத்த பாண்டி கோவிலுக்கு சென்ற போலீசார், விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போது, அங்கு  காது குத்து விழா நடத்தியது, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோவை போலீஸ்  ஏட்டு பாண்டியராஜன் என்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டம் சென்ற போலீசார், பாண்டியராஜனிடம் விசாரணையை மேற்கொண்டனர்.

மண்டபத்தில் இருந்த பொருட்களை எல்லாம் திண்டுக்கல்லுக்கு எடுத்துக் கொண்டு சென்றதாகவும், அப்போது தான், அதில் சம்மந்தமில்லாமல் மஞ்சள் பை ஒன்று இருந்ததைக் கண்டு, அதனைப் பிரித்து பார்த்த போது, சுமார் 3 லட்சம் ரூபாய் வரை இருந்ததாகவும், விசாரணையில் பாண்டியராஜன் தெரிவித்தார்.

Madurai Retd condutcor missed 3 lakhs rupees police finds

மேலும்  அந்த பணத்தை அருகிலிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைக்கவிருந்த நிலையில் தான், தாங்களும் விசாரித்து வந்ததாக குறிப்பிட்டார். இறுதியில், அழகர் சாமி தொலைத்த பணம் மீட்கப்பட்டு, அவரிடமே ஒப்படைக்கப்பட்டது.

Tags : #MADURAI #TAMILNADUPOLICE #TEMPLE #NON VEG #மதுரை #தமிழ்நாடு #அசைவம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Madurai Retd condutcor missed 3 lakhs rupees police finds | Tamil Nadu News.