‘எப்பா என்னா கேட்ச்..’ முன்னாள் RCB வீரரை மிரள வைத்த விராட் கோலி.. செம வைரல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் தேவ்தத் படிக்கல் அடித்த பந்தை விராட் கோலி கேட்ச் பிடித்து அவுட்டாக்கியது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் தொடரில் 13-வது லீக் போட்டி இன்று (05.04.2022) மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 169 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் 70 ரன்களும், ஹெட்மயர் 42 ரன்களும், தேவ்தத் படிக்கல் 35 ரன்களும் எடுத்தனர். பெங்களூரு அணியை பொறுத்தவரை ஹர்ஷல் பட்டியல், ஹசரங்கா மற்றும் டேவிட் வில்லி ஆகியோர் தலா1 விக்கெட் எடுத்தனர்.
இந்த நிலையில் இப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் தேவ்தத் படிக்கலை விராட் கோலி கேட்ச் கொடுத்து அவுட் ஆக்கினார். அதில் போட்டியின் 10-வது ஓவரை பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சல் படேல் வீசினார். அந்த ஓவரில் கடைசி பந்தை எதிர்கொண்ட தேவ்தத் படிக்கல், பந்தை தூக்கி அடித்தார். ஆனால் பேட்டில் சரியாக பந்து படாததால் வந்து உயரே பறந்து கேட்ச் ஆனது. உடனே விராட் கோலி பந்தை கேட்ச் பிடித்து அவரை அவுட்டாக்கினார். இது போட்டியில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.
கடந்த ஐபிஎல் தொடரில் தேவ்தத் படிக்கல் பெங்களூரு அணிக்காக விளையாடியுள்ளார். விராட் கோலியுடன் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய இவர், பல போட்டிகளில் அந்த அணி வெற்றி பெற காரணமாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.