VIDEO: கபடி ஆடிய சபாநாயகருக்கு ஏற்பட்ட விபரீதம்.. பதறிப்போன அதிகாரிகள்.. அதிர்ச்சி வீடியோ..!
முகப்பு > செய்திகள் > இந்தியாகபடி விளையாடிய சபாநாயகர் நிலைதடுமாறி கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரப் பிரதேச மாநில சட்டப்பேரவை சபாநாயகராக தம்மிநேனி சீதாராம் உள்ளார். இவர் நேற்று காலை ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஆமுதாலவலசா ஜூனியர் கல்லூரியில் கபடி போட்டியை தொடங்கி வைத்தார்.
அப்போது வீரர்களை உற்சாகப்படுத்தும் விதமாக சபாநாயகரும் கபடி ஆடினார். அப்போது கூடிநின்ற மக்கள் சபாநாயகரை உற்சாகப்படுத்தினர். இந்த சூழலில் விளையாடிக் கொண்டிருந்த அவர், திடீரென நிலை தடுமாறி அவர் கீழே விழுந்தார்.
இதனால் பதறிப்போன அதிகாரிகள், உடனே அவரை தூக்கிவிட்டனர். இதில் அவருக்கு கையில் லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனை அடுத்து சிறிது நேரம் வீரர்களிடம் உரையாடிவிட்டு காரில் புறப்பட்டு சென்றார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மற்ற செய்திகள்
