‘சிறப்பாக கையாண்டு’... ‘கொரோனாவை ஓடவிட்ட 5 மாநிலங்கள்’... ‘அவுங்ககிட்ட இருந்து பாடம் கத்துக்கனும்’...
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் கொரோனாவை எதிர்த்து மிகச் சிறப்பாகச் செயல்பட்டதால் தற்போது அவை வைரஸ் தொற்று இல்லாத மாநிலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் மகாராஷ்டிரா, குஜராத், தமிழகம் ஆகியவை கொரோனா வைரஸ் பாதிப்பில் முதல் 3 இடங்களில் உள்ளன. ஆனால் அதே இந்தியாவில் வடகிழக்குப் பகுதிகளில் இருக்கும் 5 மாநிலங்களில் கொரோனாவை சிறப்பாக கையாண்டு, அவரை கொரோனா வைரஸ் இல்லாத மாநிலங்களாக மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளன.
மணிப்பூர், சிக்கிம், நாகாலாந்து, அருணாசலப் பிரதேசம், மிசோரம் ஆகிய 5 மாநிலங்கள்தான் அவை. இவை அனைத்தும் அண்டை நாடுகளான பங்களாதேஷ், மியான்மர், நேபாளம், பூட்டான் போன்றவையுடன் தங்கள் எல்லைகளைப் பகிர்ந்துகொண்டுள்ளன. அப்படி இருக்கும் நிலையிலும் வைரஸ் பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்தியதுதான் இந்த மாநிலங்களின் சிறப்பு.
வடகிழக்கு மாநிலங்கள் பற்றி பேசியுள்ள மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், `பாரம்பர்யம் மற்றும் வாழ்க்கை முறையால், வடகிழக்கு பிராந்திய மக்கள் நாகரிகமாகவும் ஒழுக்கமாகவும் உள்ளனர். அதனால்தான் அவர்களால் ஊரடங்கு வழிகாட்டுதல்களை மிக எளிதாகப் பின்பற்ற முடிந்தது. மேலும், ஊரடங்கு தொடர்பான வழிகாட்டுதல்களை அங்கு செயல்படுத்தியதில் எந்தப் பிரச்னையும் ஏற்படவில்லை. முழு வடகிழக்கு மாநிலங்களும் கொரோனா வைரஸ் தடுப்பின் மாதிரியாக உருவெடுத்துள்ளன. நாட்டின் பிற பகுதி மக்கள் மற்றும் அரசு இதைப் பின்பற்ற வேண்டும்’ என்று கூறியுள்ளார்.
மேகலாயா, திரிபுரா, அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தியுள்ளன. எட்டு வடகிழக்கு மாநிலங்களில் ஐந்து இப்போது கொடிய கொரோனா வைரஸிலிருந்து விடுபட்டுள்ளன. சிக்கிம் முழுவதும் ஒரு கொரோனா வைரஸ் நோயாளி கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
