'நாங்க வேலைக்கு ஆள் எடுக்குறோம்...' 'எல்லாரையும் வேலைய விட்டே தூக்கிட்டு இருக்குற சமயத்துல...' - அதிரடி அறிவிப்பை வெளியிட பிரபல நிறுவனம்...!
முகப்பு > செய்திகள் > வணிகம்இந்தியாவின் மின்னணு வர்த்தகச் சேவை நிறுவனமான பேடிஎம் இந்தியாவில் 1000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா ஊரடங்கு காலத்தில் மக்கள் அனைவரும் அதிக அளவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவின் மிகவும் பிரபலமான மின்னணு வர்த்தகச் சேவை நிறுவனங்களில் ஒன்றான பேடிஎம் தற்போது 1000 பேருக்கு வேலைவாய்ப்பு தரப் போவதாக அறிவித்துள்ளது.
மின்னணு வர்த்தகச் சேவையின் கடும் போட்டிகளுக்கு நடுவில் தங்களின் சேவையை மக்களுக்கு பயன்படும் வகையில் மேலும் விரிவாக்கம் செய்ய இத்தகைய நடவடிக்கைளை எடுத்து வருவதாகவும் பேடிஎம் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேடிஎம் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பேடிஎம் நிறுவனமும் கடன் வழங்குதல், காப்பீடு, சொத்து மேலாண்மை உள்ளிட்ட இதர பிரிவுகளும் விரிவாக்கம் செய்யப்படவுள்ளன. அதன் காரணமாக தொழிலை விரிவாக்கத்திற்காக 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
மேலும் அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்குள் இந்த வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். இதில் நிதிச் சேவைகள் ஆய்வாளர்கள், டேட்டா தொழில்நுட்ப வல்லுநர்கள் போன்றோருக்கு முக்கியத்துவம் வழங்கப்படும். நிதிச் சேவைகள் பிரிவில் புதிய கண்டுபிடிப்புகள் போன்றவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்' என்று கூறப்பட்டுள்ளது.