'பெட்ரோல்' விலையேற்றமே 'கண்ணை கட்டுது...' 'அதுக்குல்ல...' 'சத்தமில்லாமல்' ரிசர்வ் வங்கி செய்யப் போகும் 'காரியம்...'
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் இந்த சூழலில், ஏ.டி.எம் கட்டணத்தை அதிகரிப்பது என ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக பலரும் வேலையிழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர். பல நிறுவனங்கள் சம்பளம் கொடுக்க முடியாமல் உழியர்களின் எண்ணிக்கையை குறைத்து வருகிறது. இந்த சூழலில் மக்களின் அத்தியாவசியத் தேவைகளான பெட்ரோல், காய்கறிகள், உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.
தற்போது ஏடிஎம் கட்டணத்தை அதிகரிப்பது என ரிசர்வ் வங்கி முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ஆராய இந்தியன் வங்கிகள் சங்க தலைமை நிர்வாக அதிகாரி வி.ஜி.,கண்ணன் தலைமையில் கடந்த ஆண்டே குழு ஒன்று அமைக்கப்பட்டது. இக்குழு கடந்த ஆண்டு அக்டோபரில் அறிக்கையை சமர்ப்பித்தது.
இதன்படி ரூ.5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வங்கிகள் கட்டணம் வசூலிக்கலாம் என குழு அறிக்கையில் தெரிவித்திருந்தது.
மேலும் ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் ரூ .15 முதல் ரூ .17 ஆகவும், ஒவ்வொரு நிதி அல்லாத பரிவர்த்தனைக்கும் ரூ .5 முதல் ரூ .7 ஆகவும் பரிமாற்றக் கட்டணத்தை உயர்த்த பரிந்துரைத்தது. அதேபோல், ஒரு மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட மையங்களில் ஏடிஎம் பரிவர்த்தனைகளுக்கு, ஒவ்வொரு நிதி பரிவர்த்தனைக்கும் ரூ .15 லிருந்து ரூ .18 ஆகவும், நிதி அல்லாத பரிவர்த்தனைக்கு ரூ.5 ல் இருந்து ரூ.8 ஆகவும் கட்டணம் உயர்த்தப்படும்.
மேலும் ஏடிஎம்களில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் பரிமாற்றக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 10 லட்சம் மக்கள் தொகை உள்ள பகுதிகளில் ஏடிஎம் கட்டணத்தை 24 சதவீதமாக அதிகரிக்கவும் அறிக்கை யில் கூறப்பட்டு உள்ளது. இது ஏடிஎம் பயனர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தக்கூடும் என தெரியவருகிறது.

மற்ற செய்திகள்
