"கடத்தப்பட்ட குழந்தைக்கு உறுதியான கொரோனா!".. தேடிக் கண்டுபிடிக்கப்பட்டு தனிமைப் படுத்தப்பட்ட 22 பேர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஹைதராபாத்தில் குழந்தையை கடத்திய கடத்தல்காரர்கள் மூலம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் சாலை ஓரத்தில் ஒரு குடும்பம் வசித்து வந்துள்ளது. இந்நிலையில் இந்த குடும்பத்தினரைச் சேர்ந்தோரின் 18 வயது குழந்தை கடந்த புதன் கிழமை காணாமல் போனதை அடுத்து இதை விசாரித்த போலீஸார் சிசிடிவி காட்சிகளைக் கொண்டு 27 வயதுடைய நபர் ஒருவரை கைது செய்தனர். அந்த நபரோ தனக்கு குழந்தை இல்லாததால், குழந்தை ஆசையில் அந்த 18 மாதக் குழந்தைக்கு பழங்களைக் கொடுத்து கடத்திச் சென்றதாக வாக்குமூலம் அளித்தார்.
இதனை அடுத்து அந்த நபரிடம் குழந்தையை மீட்ட போலீஸார் குழந்தையின் தாய் மதுவுக்கு அடிமையானவர் என்பதால், குழந்தையை காப்பகத்தில் ஒப்படைத்தனர். ஆனால் காப்பகத்தில் குழந்தைக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோது குழந்தைக்கு வைரஸ் தொற்று உறுதியானதை கண்டு போலீஸார் அதிர்ந்தனர். இதனால் குழந்தையின் தாய், கடத்தியவர் என குழந்தைக்கு தொடர்புடைய 22 பேர் பிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். குழந்தையைக் கடத்தியதன் மூலம் அந்த நபருக்கு கொரோனா ஏற்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.