'சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி...' 'கடந்த 2 நாட்களில் 75 பேருக்கு தொற்று உறுதி...' 'நிலைமை மோசமாக இதுதான் காரணம்...'

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Suriyaraj | Apr 30, 2020 11:32 AM

சென்னையில் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக திருவிக நகர் மாறியுள்ளது. அங்கு கடந்த 2 நாட்களில் மட்டும் 75 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

Thiruvika Nagar has become the most affected area in Chennai

சென்னையில் இதுவரை மொத்தம் பாதித்துள்ள 767 நபர்களில், 15 பேர் உயிரிழந்துள்ள நிலையில், குணமடைந்து உள்ளவர்கள் எண்ணிக்கை 215 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் நேற்று உறுதி செய்யப்பட்ட 104 தொற்றுகளில் 94 தொற்று சென்னையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்று அதிகபட்சமாக, திருவிக நகர் மண்டலத்தில் 41 நபரும், ராயபுரத்தில் 25 நபரும், அண்ணாநகரில் 8 நபரும், தண்டையார்பேட்டையில் ஏழு நபரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.அதற்கு முன் தினம் அதிகம் தொற்று உறுதி செய்யப்பட்ட மண்டலமாக திருவிக நகர் தான் உள்ளது.

நேற்றின் முன் தினம் அங்கு 34 பேருக்கு தொற்று ஏற்பட்டது. நேற்று நாற்பத்தி ஒரு நபர்களுக்கு உறுதி செய்யப்பட்டது.

திருவிக நகரில் அதிகமான பாதிப்பு ஏற்படுவதற்கு காரணம் அந்தப் பகுதியில் மிக நெருக்கமான வீடுகள் இருப்பதுதான் எனக் கூறப்படுகிறது. அப்பகுதி மக்கள் தனிநபர் இடைவெளியை சரியாக கடைப்பிடிப்பதில்லை என்றும் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர்..

இந்தநிலையில், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் பாதிக்கப்பட்ட 2 நபரும் குணமடைந்து உள்ள நிலையில், சென்னையில் தொற்றிலிருந்து முழுமையாக விடுபட்ட மண்டலமாக சோழிங்கநல்லூர் மாறியுள்ளது.