அதிகாலை நேரம்.. பொத்தென கேட்ட சத்தம்.. "காவலாளி ஓடி போய் பாத்தப்போ.." இணையத்தை அதிர வைத்த இளைஞரின் முடிவு
முகப்பு > செய்திகள் > இந்தியாதெலுங்கானா மாநிலம் சைதாபாத் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் தீனா. 23 வயதாகும் இவர், குவாலியர் இந்திய தகவல் தொழில்நுட்பம் மற்றும் வேளாண்மை நிறுவனத்தில் படித்து வந்துள்ளார்.
Also Read | கேரளாவில் கண்டுபிடிக்கப்பட்ட அடுத்த வைரஸ்.. 300 பன்றிகளுக்கு நேர போகும் துயரம்??.. அதிர்ச்சி பின்னணி
மேலும், சைதாபாத் பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில், தனது பெற்றோர்களுடனும் தீனா வசித்து வந்ததாக கூறப்படுகிறது.
அதே போல, தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தீனா நடத்தி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றது. சுமார் 29 ஆயிரம் சப்ஸ்க்ரைபர்கள் வரை கொண்ட அந்த சேனலில், கேமிங் தொடர்பான வீடியோக்களை தீனா தொடர்ந்து வெளியிட்டு வந்துள்ளார்.
இரவு முழுவதும் அதிக நேரம் வீடியோ கேம் விளையாடுவதும், youtube-ல் வீடியோ பதிவிட்டு வருவதும் என தீனா அதிக நேரத்தை செலவிட்டு வந்ததாக தெரிகிறது. பெற்றோர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன் பெரிய அளவில் பேசாமல், தனது அறையிலேயே இருந்தும் வந்துள்ளார் தீனா.
இந்நிலையில், அதிகாலை சுமார் 5 மணியளவில், தீனா தங்கி வந்த குடியிருப்பின் மேல் மாடியில் இருந்து குதித்து விபரீத முடிவை எடுத்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அவர் விழுந்த சத்தம் கேட்டு, குடியிருப்பில் இருந்த காவலாளி, உடனடியாக சம்பவ இடம் சென்று பார்த்துள்ளார். அங்கு தீனா உயிரிழந்து கிடந்ததாகவும் தகவல்கள் கூறுகிறது.
போலீசாருக்கு இது பற்றி தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் தீனாவின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தனது மனதில் இருந்த பல விஷயங்களை ட்வீட் லாங்கரில் நீண்ட பதிவாக தீனா எழுதியிருப்பதையும் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
அப்படி அவர் எழுதியிருந்த பதிவின் படி, தான் சிறு வயது முதல் தற்போது வரை அதிகம் அவதிபட்டு வந்ததாகவும், இந்த மன அழுத்தம், சோகம் மற்றும் கோபம் ஆகியவற்றை தாங்க முடியாமல், இந்த உலகை விட்டு போவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இது தவிர, குழந்தையாக இருந்த போது, தான் பாலியல் வன்கொடுமையை அனுபவித்ததாகவும் தனது பெற்றோர்கள் எப்பொழுதும் தனது முன்னிலையில் சண்டை போட்டுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். மேலும், தனக்கு நல்ல அப்பா கிடையாது, அம்மாவும் ஆரம்பம் முதல் சரியாக வழி காட்டவில்லை என்பதுடன் தனது குழந்தைப் பருவம் மிக மோசமாக இருந்ததாகவும் தீனா தன்னுடைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தான் ஆரம்பித்த youtube சேனலின் கமெண்ட்களில் உரையாடியது, தனக்கு கிடைத்த பெரிய மகிழ்ச்சி என்றும், வாழ்க்கையில் தனக்கு நடந்த ஒரே நல்லது, தன்னுடைய youtube சேனல் தான் என்றும் கூறி உள்ளார். எனது முடிவு யாராலும் நினைவு கூரப்படாது என்றும் தீனா கூறி உள்ளார். தன்னுடைய யூடியூப் சேனலில் வீடியோ ஒன்றையும் கடைசியாக Schedule செய்து விட்டு தீனா இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.
இப்படி பல விஷயங்களின் காரணமாக, தற்போது வாழ முடியாமல் இந்த முடிவை இளைஞர் தீனா எடுத்துள்ள சம்பவம், அவரது சப்ஸ்கிரைபர்கள் மத்தியில் கடும் அதிர்வலைகளையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.