கொரோனா பலி எண்ணிக்கையில்... 'வல்லரசு' நாட்டை பின்னுக்குத்தள்ளி 4-வது இடம்பிடித்த இந்தியா!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா பலி எண்ணிக்கையில் பிரிட்டனை இந்தியா பின்னுக்குத்தள்ளி இருக்கிறது.
![With 47,000+ deaths, India at No 4 on Covid toll tally With 47,000+ deaths, India at No 4 on Covid toll tally](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/with-47000-deaths-india-at-no-4-on-covid-toll-tally.jpg)
சீனாவில் கொரோனா தோன்றினாலும் உலகளவில் அமெரிக்கா, பிரேசில், மெக்சிகோ, இந்தியா, பிரிட்டன், இத்தாலி போன்ற நாடுகளே கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக அமெரிக்கா கொரோனா பரவலில் தொடர்ந்து முதலிடத்தை தக்க வைத்துள்ளது.
இந்த நிலையில் உலகளவில் கொரோனாவால் பலியானவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளில் இந்தியா 4-வது இடம் பிடித்துள்ளது. 1 லட்சத்து 68 ஆயிரத்து 218 பேருடன் முதல் இடத்தை அமெரிக்காவும், 1,03,099 பேருடன் பிரேசில் 2-வது இடமும், 53,929 பேருடன் மெக்சிகோ 3-வது இடமும் 47,065 பேருடன் இந்தியா 4-வது இடமும் 46,706 பேருடன் பிரிட்டன் 5-வது இடமும் பிடித்துள்ளது.
நேற்று (புதன்கிழமை) இரவு வரையிலான புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பிரிட்டனை பின்னுக்குத்தள்ளி இந்தியா 4-வது இடம்பிடித்து உள்ளது. அதே நேரம் இறப்பு விகிதத்தை பொறுத்தவரை பிரிட்டன் 14.9%, மெக்சிகோ 10.9%, பிரேசில் 3.3%, அமெரிக்கா 3.2% என அதிக சதவீதம் கொண்டுள்ளன. இந்தியா 2% மட்டுமே கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)