'மயங்கி எந்திரிச்சப்போ துணியில இருந்த கறை...' 'என்ன நடந்துச்சுன்னே தெரியல...' 'குழந்தைக்கு தாயான சிறுமி...' - அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி...!
முகப்பு > செய்திகள் > இந்தியாபாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிய 14 வயது சிறுமி, தனக்கு பிறந்த குழந்தையை சமூக காரணங்களால் வளர்க்க மறுத்து, அனாதை இல்லத்திற்கு அனுப்பட்ட செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள ஒரு பூங்காவில் தன் நண்பர்களுடன் 13 வயது சிறுமியும் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் குளிர்பானத்தை குழந்தைகளுக்கு குடிக்க கொடுத்துள்ளார். இந்நிலையில் மயக்கமடைந்த சிறுமியை அவருக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார்.
சிறுமி என்னவென்று தெரியாமல் தன் உடையில் இருக்கும் இரத்தக்கறையை பற்றி தான் பெற்றோரிடமும் மறைத்துள்ளார். இந்நிலையில் சில மாதங்களுக்கு பிறகு சிறுமி கர்ப்பமாக உள்ளது கண்டுபிடிக்கப்பட்டு காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை குற்றவாளி அடையாளம் காணப்படவில்லை.
பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தற்போது குழந்தை பிறந்து மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதிதாகப் பிறந்த குழந்தையை சிறுமி வாங்க மறுத்துள்ளார். மேலும் சிறுமியின் பெற்றோரும் சமூக காரணங்களை கூறி குழந்தையை பராமரிக்க மறுத்தால் அனாதை இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி அதிர்வை ஏற்படுத்தி வருகிறது. சமுக காரணங்கள் ஒரு குழந்தையின் வாழ்க்கையும் ஒரு சிறுமியின் வாழ்க்கையும் கேள்விக்குறியாக மாறியுள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
