"கொரோனாவே இன்னும் முடியல... அதுக்குள்ள அடுத்த 'அட்டாக்' வேகமெடுத்தாச்சு...! இனி 'கடவுள்' தான் காப்பாத்தனும்!" - அதிர்ச்சி ரிப்போர்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தொற்று பரவி வரும் இந்த சூழலில், டெங்கு பாதிப்பு வேகமெடுத்து வருகிறது.

சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து மற்ற நாடுகளிலும் பரவி வருகிறது. இந்த வைரஸை அழிப்பதற்கு உலக நாடுகள் மருந்து கண்டுபிடிக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்நிலையில், ஹைதராபாத்தில் நாள் ஒன்றுக்கு 1,200 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்தே ஹைதராபாத் இன்னும் மீண்டு வர இயலாதா நிலையில், அடுத்ததாக அங்கு டெங்கு காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. டெங்கு காய்ச்சலால், மே மாதத்தில் 9 பேரும், ஜூன் மாதத்தில் 14 பேரும் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், ஜூலையில் ஒருவருக்கு இந்த காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும், ஏழு பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றனர்.
COVID-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க நியமிக்கப்பட்ட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் டெங்கு பரிசோதனைகளை கட்டாயமாக்க அதிகாரிகள் அரசுக்கு அறிவுறுத்தி உள்ள நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் அனைத்து COVID-19 நோயாளிகளும் பரிசோதிக்கப்பட்டால் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
டெங்கு நோயாளிகள் பதிவான இடங்களில் சுமார் 80-100 வீடுகளில் காய்ச்சல் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், கடவுளால் மட்டுமே இப்போது நகரத்தை காப்பாற்ற முடியும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்ற செய்திகள்
