'15 பாலிவுட் ஸ்டார்களின் பெயர்களை'... 'NCBயிடம் வெளியிட்ட ரியா'... 'போதைப்பொருள் வழக்கில் தொடர்ந்து வெளிவரும்'... 'திடுக்கிடும் தகவல்களால் அதிர்ச்சி!'...
முகப்பு > செய்திகள் > இந்தியாபோதைப்பொருள் வழக்கில் நடிகை ரியா 15 பாலிவுட் பிரபலங்களின் பெயர்களை போதைப்பொருள் தடுப்பு ஆணையத்திடம் கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கு தொடர்பான போதைப்பொருள் வழக்கில் ரியா சக்ரபோர்த்தி, அவருடைய சகோதரர் ஷோயிக் மற்றும் 4 பேரின் ஜாமீன் மனுவை இன்று மும்பை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இந்நிலையில், போதைப்பொருள் தடுப்பு போலீசார் நடத்திய விசாரணையின் போது, ரியா சக்ரபோர்த்தி போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் மற்றும் கொள்முதல் செய்தவர்கள் என சில பாலிவுட் பிரபலங்களின் பெயர்களை கூறியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதைத்தொடர்ந்து சுமார் 15 பாலிவுட் பிரபலங்கள் போதைப்பொருள் தடுப்பு போலீசாரின் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர்கள் பி வகை நடிகர்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஊரடங்கு காலத்தில் சுஷாந்த் வீட்டிலிருந்து ரியாவின் வீட்டிற்கு அனுப்பப்பட்ட ஒரு கூரியரில் அரை கிலோ போதைப்பொருள் இருந்ததற்கும், கூரியர் நபரிடமிருந்து ஷோயிக் கூரியரை வாங்கியதற்கும் ஆதாரங்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அதில், ஏப்ரல் மாதத்தில் அனுப்பப்பட்ட அந்த கூரியரில் சந்தேகத்தைத் தவிர்ப்பதற்காக சில வீட்டுப் பொருட்களும் சேர்த்து அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட கூரியர் நபர் தீபேஷ் சாவந்த் மற்றும் ஷோயிக் சக்ரபோர்த்தி ஆகியோரை அடையாளம் காட்டியுள்ளதாகவும், கூரியர் நபரின் தொலைபேசி அழைப்பு விவரங்கள் ஷோயிக் மற்றும் தீபேஷ் ஆகியோரிடமிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
