'2-ம் நம்பர பிரஸ் பண்ண சொன்னாங்க’.. பாஜகவுக்கு ஓட்டு போட சொன்னார்களா தேர்தல் பணி அதிகாரிகள்?
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Apr 18, 2019 08:34 PM
பெங்களூரில் பாஜகவுக்கு ஓட்டுப்போடச் சொல்லி வாக்காளர்களை பாஜக தொண்டர்களும், வாக்குச்சாவடி அதிகாரிகளுமே கட்டாயப்படுத்தியதாக தகவல்கள் வெளியாகி பரபரபப்பை கிளப்பியுள்ளன.
தேசிய செய்தி சேனல்களின் தகவல்களின்படி, பெங்களூரில் பென்சன் நகர் கர்நாடகாவில் உள்ளது. இங்குள்ள வாக்குச் சாவடிக்கு ஓட்டுப் போட வந்த வாக்காளரை, அங்கு தேர்தல் பணியில் இருந்த அதிகாரிகளே 2-ஆவது பட்டனை பிரஸ் செய்யச் சொல்லி பிரஷர் கொடுத்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதாவது 2-வது பட்டனில் இருந்த கட்சிச் சின்னமான பாரதி ஜனதா கட்சி சின்னத்தை பிரஸ் செய்யச் சொல்லி, தேர்தல் பணி அதிகாரிகளே வாக்காளர்களுக்கு சொல்லித்தரும் பெயரில் அறிவுறுத்தியதாக, வாக்காளர் ஒருவரால் குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, இந்த குற்றச் சாட்டில் உண்மை இருந்தால் விசாரிப்பதாக தேர்தல் ஆணையத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. எனினும் தேர்தல் பணியில் இருந்த அந்த அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
இதேபோல் அம்ரோ தொகுதியில் கன்வர் சிங் என்கிற பாஜக தலைவர் ஒருவர், பர்தாவுடன் சென்ற வாக்காளரை பாஜகவுக்கு ஓட்டுப் போடச் சொல்லி வலியுறுத்தியதாகவும், இதனால் அங்கிருந்த தேர்தல் பணி அதிகாரிகள் அந்த பர்தா அணிந்த வாக்காளரின் அடையாளங்களை முறையாக பரிசோதனை செய்யாமல் வாக்குப்பதிவு செய்ய அனுமதித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளன.