"சாரா கூட டேட்டிங்கா?".. முதல் முறையா கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் சொன்ன பதில்.. வைரல் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆஸ்திரேலியாவில் வைத்து சமீபத்தில் 8 வது டி 20 உலக கோப்பை தொடர் நடந்து முடிந்தது. இதில், பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடந்த இறுதி போட்டியில், அவர்களை வீழ்த்தி இரண்டாவது முறையாக டி 20 உலக கோப்பையை இங்கிலாந்து அணி கைப்பற்றி பட்டையைக் கிளப்பி இருந்தது.
ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணியும் டி 20 உலக கோப்பையை வெல்லும் அணிகளில் ஒன்றாக கருதப்பட்டு வந்த நிலையில், இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் தோல்வி அடைந்து வெளியேறி இருந்தது. இருந்தாலும் அடுத்து வரும் கிரிக்கெட் தொடர்கள் மற்றும் ஐசிசி தொடர்களில் இந்திய அணி அசத்தும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
உலக கோப்பை தொடரை முடித்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கே 3 டி 20 மற்றும் 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடர்களும் நடைபெறுகிறது. ரோஹித் ஷர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளதால் டி 20 அணியை ஹர்திக் பாண்டியாவும், ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியை ஷிகர் தவானும் தலைமை தாங்குகின்றனர்.
டி 20 உலக கோப்பை முடிந்த கையுடன் இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் விளையாடுவதால் ரசிகர்களும் பெரும் ஆவலுடன் உள்ளனர். இந்த நிலையில், இந்திய அணியின் இளம் வீரரான சுப்மன் கில் தெரிவித்துள்ள கருத்து ஒன்று இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
சமீபத்தில் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மற்றும் பாலிவுட் நடிகை சாரா அலிகான் ஆகியோர் ஒன்றாக உணவகம் ஒன்றில் இருக்கும் புகைப்படம் சோஷியல் மீடியாவில் அதிகம் வைரலாகி இருந்தது. அப்படி ஒரு சூழலில், நடிகை சோனம் பாஜ்வா பஞ்சாபியில் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் சமீபத்தில் கலந்து கொண்டிருந்தார்.
இது தொடர்பான ப்ரோமோ ஒன்றும் வெளியாகி இருந்தது. இதில் சுப்மன் கில்லிடம், "பாலிவுட்டில் மிகவும் ஃபிட்டான நடிகை யார்?" என சோனம் பாஜ்வா கேட்பது இடம்பெற்றுள்ளது. இதற்கு சாரா என்றும் கில் பதிலளிக்கிறது தெரிகிறது. தொடர்ந்து "அடுத்ததாக நீங்கள் சாராவை டேட்டிங் செயகிறீர்களா?" என சோனம் கேட்கும் கேள்விகள் இருக்க, "இருக்கலாம்" என கில் சொன்னதும் மீண்டும், "தயவு செய்து உண்மையை சொல்லுங்கள்" என சோனம் கேட்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
இறுதியில், "நான் உண்மையை தான் சொல்கிறேன். இருக்கலாம், ஒரு வேளை இல்லாமலும் இருக்கலாம்" என சுப்மன் கில் பதில் சொல்லும் காட்சிகள் அதன் பின்னர் வருகிறது. கில் - சாரா அலிகான் டேட்டிங் செய்வது பற்றிய கேள்விக்கு உறுதியாக இல்லாமல் சுப்மன் கில் சொன்ன பதில் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி 20 மற்றும் ஒரு நாள் தொடர் இரண்டிலும் சுப்மன் கில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.