"'கொல்கத்தா' டீமோட 'DANGEROUS' பேட்ஸ்மேன் இவர் தான்... 'பவுலர்களே' கவனமா இருங்க.." - இளம்வீரரை பாராட்டித் தள்ளிய 'பாண்டிங்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரின் ஐந்தாவது போட்டியில் இன்று மும்பை இந்தியன்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன.
முன்னதாக, மும்பை இந்தியன்ஸ் அணி தங்களது முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக தோல்வியை தழுவியிருந்தது. இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக களமிறங்கவுள்ள நிலையில், கொல்கத்தா அணி பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் பலம் வாய்ந்தவையாக உள்ளது.
கொல்கத்தா அணியின் புதிய பயிற்சியாளரான மெக்குல்லம் இந்த ஐபிஎல் தொடர் முழுவதும் இளம்வீரர் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்றும், இந்த தொடரில் சிறந்த ஆட்டத்திறனை கில் வெளிப்படுத்துவார் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் இளம் வீரரான சுப்மன் கில், மிகவும் ஆபத்தான வீரராக இருப்பார் என ரிக்கி பாண்டிங் கருத்து தெரிவித்துள்ளார். பேக்பூட் (Backfoot) ஆடுவதிலும், ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதிலும் கில் சிறப்பாக செயல்படுகிறார் என்றும் பாண்டிங் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற திறனை பயன்படுத்தி அவர் டி20 போட்டிகளில் மட்டுமில்லாது, டெஸ்ட் போட்டிகளிலும் மிகச்சிறந்த வீரராக எதிர்காலத்தில் ஜொலிப்பார் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கரும் சுப்மன் கில், இந்த ஐபிஎல் தொடரில் நட்சத்திர வீரராக ஜொலிப்பார் என கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.