சரியான காட்டடி...! 'வெறும் 35 பந்துகளிலேயே...' - பிராக்டீஸ் மேட்ச்ல அடிச்சு தூள் கெளப்பிய வீரர்...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Apr 06, 2021 03:21 PM

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடங்கவுள்ள நிலையில் கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டம் நடைபெற்றுள்ளது.

Shubman Gill 35-ball 76 runs Intra-squad ipl Match

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திற்கு எதிரான தொடக்க ஆட்டத்திற்கு முன்னதாக நேற்று நடைபெற்ற இந்த பயிற்சி ஆட்டத்தில் பல மிரளவைக்கும் அடிகளும், கேட்ச்களும் இருந்தன. ஷுப்மேன் கில் அற்புதமான ஒரு அடித்து தெறிக்கவிட்டார்.

Shubman Gill 35-ball 76 runs Intra-squad ipl Match

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மேன் கில் வெறும் 35 பந்துகளில் 76 ரன்கள் எடுத்துக்கொடுத்தார். வெல்ல வெறும் 88 ரன்களைத் துரத்திய கில், அசால்ட்டாக வெற்றியை தன்பக்கம் இழுத்தார். மொத்தம் மூன்று சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகள் அடித்து துவம்சம் செய்தார். இறுதியில்10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Shubman Gill 35-ball 76 runs Intra-squad ipl Match

ஈயோன் மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏப்ரல் 11 ஆம் தேதி சென்னையில் உள்ள எம். ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் தங்களின் முதல் ஆட்டத்தை ஆட உள்ளது. இரண்டு முறை ஐபிஎல் சாம்பியன்களான கொல்கத்தா அணி சென்னையில் முதல் மூன்று போட்டிகளிலும், மும்பையில் இரண்டு, அகமதாபாத்தில் நான்கு மற்றும் பெங்களூரில் இறுதி ஐந்து போட்டிகளிலும் விளையாட இருக்கிறது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shubman Gill 35-ball 76 runs Intra-squad ipl Match | Sports News.