'அந்த 2 இளம் வீரர்களுக்கும்’... ‘அடுத்த டெஸ்ட் போட்டியில்’... ‘ஆடும் லெவனில் இடம் கிடைச்சாதான் சரி வரும்’... ‘முன்னாள் கேப்டன் கருத்து’...!!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Sangeetha | Dec 21, 2020 03:31 PM

ஆஸ்திரேலிய அணியுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில், சுப்மன் கில் மற்றும் கே.எல் ராகுலுக்கு நிச்சயம் இடம் கொடுக்க வேண்டும் என முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Shubman Gill And KL Rahul Are The Two Certain Inclusions In Team India

ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலிய அணியுடன் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 56 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி, வெறும் 36 ரன்களுக்கே 9 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து மிகப்பெரும் சர்ச்சையை சந்தித்தது.

இந்திய பேட்ஸ்மேன்களின் பொறுப்பற்ற ஆட்டத்தினாலும், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் அபார பந்துவீச்சினாலும் முதல் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றியும் பெற்றதாக கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

இரு அணிகள் இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி அடுத்த சில தினங்களில் துவங்க உள்ள நிலையில், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் பலர் இந்திய அணி தோல்வியில் இருந்து மீண்டு வருவதற்கு தேவையான தங்களது ஆலோசனைகளை தொடர்ந்து கூறி வருகின்றனர். அதே போல் எஞ்சியுள்ள போட்டிகளில் இருந்து இந்திய கேப்டன் விராட் கோலியும், முகமது ஷமியும் விலகியுள்ளதால், கோலி இல்லாத இந்திய அணியால் ஆஸ்திரேலிய அணியை சமாளிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்நிலையில், இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர், கே.எல். ராகுல் மற்றும் சுப்மன் கில்லிற்கு இந்திய அணியில் நிச்சயம் இடம் கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கூறுகையில், 'அடுத்த போட்டிக்கான இந்திய அணியில் நிச்சயம் மாற்றங்கள் தேவை. குறிப்பாக கே.எல் ராகுலிற்கு இந்திய அணியில் நிச்சயம் இடம் கிடைக்க வேண்டும்.

ப்ரித்வி ஷாவிற்கு பதிலாக கே.எல் ராகுல் இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்க வேண்டும். அதே போல் இளம் வீரர் சுப்மன் கில்லிற்கும் இந்திய அணியில் இடம் கிடைக்க வேண்டும், சுப்மன் கில்லிற்கு வாய்ப்பு கிடைத்தால் அவரை 5-வது 6-வது இடத்தில் களமிறக்க வேண்டும். இரண்டு வீரர்களும் நல்ல பார்மில் உள்ளனர், இவர்களை அணியில் சேர்த்தால் அது இந்திய அணிக்கும் நிச்சயம் பயனுள்ளதாக அமையும்” என்று தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Shubman Gill And KL Rahul Are The Two Certain Inclusions In Team India | Sports News.