"அடுத்த '10' வருஷம்... 'டெஸ்ட்' கிரிக்கெட்ல இவரை அசைக்க முடியாது... உலகமே அவர திரும்பி பாக்கும்..." இந்திய வீரரை பாராட்டிய முன்னாள் ஆஸி. 'வீரர்'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்ற டெஸ்ட் போட்டித் தொடரை இந்திய அணி கைப்பற்றி அசத்தியிருந்தது.

வரலாற்று சிறப்புமிக்க இந்த டெஸ்ட் தொடரில், அறிமுக வீரராக இந்திய அணியின் சுப்மன் கில் இடம்பெற்றிருந்தார். மொத்தமாக, 3 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்கிய அவர், மொத்தம் 259 ரன்கள் எடுத்திருந்தார். அது மட்டுமில்லாமல், மிக முக்கிய போட்டியாக அமைந்த கடைசி டெஸ்ட் போட்டியில் 91 ரன்கள் எடுத்திருந்தார்.
அறிமுக தொடரிலேயே ஆஸ்திரேலிய அணியின் பலம் வாய்ந்த பந்து வீச்சை எந்தவித பதற்றமும் இன்றி சிறப்பாக கையாண்ட இளம் வீரர் சுப்மன் கில்லுக்கு பல தரப்பில் இருந்து பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளங்கிய சுப்மன் கில்லுக்கு தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், சுப்மன் கில்லைப் பாராட்டி ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிராட் ஹாக் கருத்து ஒன்றைத் தெரிவித்துள்ளார். அடுத்த 10 ஆண்டுகளுக்கு இந்திய அணியின் சிறப்பான துவக்க வீரராக சுப்மன் கில் வலம் வருவார் என ஹாக் குறிப்பிட்ட நிலையில், அதற்கான திறன் அவரிடம் உள்ளதாகவும் ஹாக் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் சுப்மன் கில்லுக்கு ஷார்ட் பால் போன்றவற்றை போட்டு சோதித்த போது அதனை ஒரு ஜாம்பவான் போல அவர் எதிர்கொண்டதாகவும், அடுத்த பத்து ஆண்டுகள் மிகச்சிறந்த துவக்க வீரராக சுப்மன் கில்லை இந்த உலகம் பார்க்கும் என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
