ஜெயிச்சதுக்கு அப்பறம் ஷுப்மன் கில் போட்ட போஸ்ட்.. பொசுக்குன்னு செருப்ப காட்டிய யுவராஜ் சிங்.. என்ன ஆச்சு?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுகுஜராத் டைட்டன்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷுப்மன் கில் போட்ட இன்ஸ்டாகிராம் பதிவு குறித்து தான் தற்போது நெட்டிசன்கள் பரபரப்புடன் பேசி வருகின்றனர்.
Also Read | சிங்க இனத்துக்கே பங்கமா.? காட்டெருமைகளுக்கு பயந்து மரத்தில் ஏறி அழும் காட்டு ராஜா.. உலக வைரல் வீடியோ..!
15 வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்றிரவு நடந்த 40 வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 195 ரன்களை சேர்த்தது. இந்த அணியில் இளம் வீரர் அபிஷேக் ஷர்மா 65 ரன்களும் மார்க்ரம் 56 ரன்களும் எடுத்து அசத்தினர்.
சேசிங்
பின்னர் 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சேஸிங்கை துவங்கியது குஜராத் அணி. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான கில் - சாஹா ஜோடி நிதானமாக ஆடி ரன்களை உயர்த்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 22 ரன்களில் வெளியேறினார் கில். அவரை தொடர்ந்து கேப்டன் பாண்டியாவும் 10 ரன்களில் வெளியேற மேட்ச் பரபரப்பானது. ஒருபக்கம் சீட்டு கட்டு போல விக்கெட்கள் விழுந்தாலும் மற்றொரு பக்கம் சாஹா நிலைத்து ஆடி அரைசதம் அடித்தார். ஆனால் அவரும் உம்ரான் மாலிக் பந்தில் போல்டாகி 68 ரங்களுடன் வெளியேறினார்.
ஒருவழியாக 6 கடைசி பந்துகளில் 22 ரன்கள் தேவை என்ற நிலையில் ராகுல் தேவாட்டியா - ரஷீத் கான் ஜோடி அபாரமாக ஆடி வெற்றியை வசமாக்கியது. இந்த வெற்றியின் மூலம் பட்டியலில் 14 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்திற்கு சென்றது குஜராத்.
கில் போட்ட போஸ்ட்
மேட்ச் முடிந்த பின்னர் குஜராத் அணியின் பேட்ஸ்மேன் கில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,"எண்டெர்டெயின்மெண்ட் வேண்டும் என்றால் குஜராத் டைட்டன்ஸ் அணியை அழையுங்கள் " என பதிவிட்டு கண்ணடிக்கும் ஸ்மைலி ஒன்றை போட்டிருந்தார். அதில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் " உங்களுடைய ஷாட்கள் மிகுந்த எண்டெர்டெயின்மெண்டாக இருந்தன" என்று கமெண்ட் போட்டு, புருவத்தை உயர்த்தும் ஸ்மைலி ஒன்றை போட்டிருந்தார்.
கொஞ்சநேரத்தில் செருப்பு ஸ்மைலி ஒன்றையும் யுவராஜ் அதே பதிவில் கமெண்டாக போட்டுவிட கிரிக்கெட் வட்டாரத்தில் இது தற்போது பேசுபொருளாகியிருக்கிறது.