'உணர்ச்சிவசப்பட்டு சாரா போட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி'... 'அவரை பத்தி இருக்குமோனு யோசித்த ரசிகர்கள்'... கடைசியில் காத்திருந்த ட்விஸ்ட்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசச்சின் டெண்டுல்கர் மகள் சாரா வெளியிட்டுள்ள ஒரு இன்ஸ்டாகிராம் பதிவு வைரலாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகள் சராவிற்கு தற்போது 23 வயதாகிறது. சமீபகாலமாக அவரை குறித்த பேச்சு சமூகவலைத்தளங்களில் பரவலாகக் காணப்படுகிறது. அதற்கு முக்கிய காரணம், சாரவுக்கும் இளம் கிரிக்கெட் வீரர் சுப்மன் கில்லுக்கும் இடையே காதல் என கிசுகிசுக்கப்பட்டு வருவது தான்.
அதேபோன்று இருவரும் சில புகைப்படங்களை தனித்தனியே பகிரும் போது ஒருவருக்கொருவர் கமெண்ட் செய்வதை வழக்கமாக வைத்திருந்தனர். இது நெட்டிசன்கள் மத்தியில் இன்னும் பரபரப்பைக் கூட்டியது. இந்த நிலையில் இந்த கிசுகிசு குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளித்த சுப்மன் கில், ''நான் இப்போதும் சிங்கிளாக தான் இருக்கிறேன்'' எனக் கூறி இந்த கிசுகிசுவுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
இது ஒருபுறம் இருக்க தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சாரா போட்ட ஸ்டோரி ஒன்று வைரலாகி வருகிறது. சாரா உணர்ச்சிவசப்பட்டு இந்த பதிவை அவர் போட்டுள்ளார். அதாவது சமீபத்தில் வெளியான FRIENDS Reunion என்ற நிகழ்ச்சி உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. 17 ஆண்டுகளுக்கு முன்னர் ஒளிப்பரப்பான இந்த நிகழ்ச்சியின் சிறப்புத் தொகுப்பு சில தினங்களுக்கு முன்னர் புதிதாக வெளியானது.
இந்த நிகழ்ச்சி தான் சாரா டெண்டுல்கரை தற்போது உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. அதன்படி கண்ணீர் விட்டு அழும் இமோஜி (emoji)யை வெளியிட்டுள்ள சாரா FRIENDS Reunion புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். நெட்டிசன்கள் பலரும் சாராவின் பதிவு சுப்மன் குறித்து இருக்குமோ என நினைத்த நிலையில் அவர்களது யூகங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் சாரா.

மற்ற செய்திகள்
