'நடப்பு சீசனில் மாஸ் காட்டிய இளம் வீரர்கள்!!!'... 'கங்குலி பாராட்டிய லிஸ்ட்டில்'... 'மிஸ்ஸான 2 முக்கிய பிளேயர்ஸ்?!!'...
முகப்பு > செய்திகள் > விளையாட்டுநடப்பு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட இளம் வீரர்கள் பெயரைக் குறிப்பிட்டு பிசிசிஐ தலைவர் கங்குலி பாராட்டிப் பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவுக்கு பல சர்வதேச, நட்சத்திர வீரர்களை விடவும் இளம் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். குறிப்பாக ஹைதராபாத் அணியில் தமிழக வீரர் நடராஜன் முக்கிய பந்துவீச்சாளராக சிறப்பாக செயல்பட்டிருந்தார். அதே போல வருண் சக்கரவர்த்தி, ராகுல் திரிபாதி, கம்லேஷ் நாகர்கோட்டி, ஷுப்மன் கில் ஆகியோர் கொல்கத்தா அணியில் சிறப்பாக செயல்பட்டனர். சிஎஸ்கே அணியில் ருதுராஜ் கெயிக்வாட், ராஜஸ்தான் அணியின் சஞ்சு சாம்சன், பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல், மும்பை அணியில் இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் போன்றோரும் சிறப்பாக செயல்பட்டனர்.
இந்நிலையில் பிசிசிஐ தலைவர் கங்குலி நடப்பு சீசனில் தன்னை கவர்ந்த இளம் வீரர்கள் பற்றி குறிப்பிட்டு பாராட்டி பேசியுள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன், கொல்கத்தா அணியின் ராகுல் திரிபாதி, வருண் சக்கரவர்த்தி, ஷுப்மன் கில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் தேவ்தத் படிக்கல் மற்றும் மும்பை அணியின் சூர்யகுமார் யாதவ் ஆகிய ஆறு பேரையும் இந்த சீசனில் சிறப்பாக செயல்பட்டதாக கூறி கங்குலி பாராட்டியுள்ளார்.
மேலும் சூர்யகுமார் இந்திய அணியில் தேர்வு செய்யப்படாதது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ள நிலையில் யாதவ் குறித்து பேசியுள்ள கங்குலி, அவர் நல்ல வீரர் எனவும், அவருக்கான நேரம் வரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அத்துடன் நடப்பு தொடரில் தொடர்ந்து மூன்று அரைசதம் அடித்து சாதனை படைத்த சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெயிக்வாட் பற்றியும், தன் யார்க்கர் பந்துகளால் சர்வதேச வீரர்களை தடுமாறச் செய்த தமிழக வீரர் நடராஜன் பற்றியும் கங்குலி எதுவுமே குறிப்பிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.