கொரோனாவால் 2 தடவை தள்ளி வைக்கப்பட்ட கல்யாணம்.. நீண்ட நாள் காதலியை கரம்பிடித்த ‘RCB’ வீரர்.. குவியும் வாழ்த்து..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Jun 22, 2021 09:53 AM

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் ஆடம் ஜாம்பா தனது நீண்ட நாள் காதலியை கரம்பிடித்துள்ளார்.

RCB Adam Zampa gets married to his longtime girlfriend

ஆஸ்திரேலிய சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா, ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் சார்பாக விளையாடி வருகிறார். ஆனால், கொரோனா பரவல் காரணமாக, இந்த  ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 14-வது சீசன் ஐபிஎல் தொடரின் பாதியிலேயே ஜாம்பா நாடு திரும்பினார்.

RCB Adam Zampa gets married to his longtime girlfriend

இந்தியாவில் கொரோனா 2-வது அலையின் காரணமாக மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக ஐபிஎல் தொடரில் விளையாடிய வீரர்களின் குடும்பத்தினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனியின் பெற்றோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்கள் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்பினர்.

RCB Adam Zampa gets married to his longtime girlfriend

அதேபோல் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடி வரும் தமிழக வீரர் அஸ்வின் குடும்பத்தினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் அவர் தொடரின் பாதியிலேயே வீடு திரும்பினார். இதனைத் தொடர்ந்து ஐபிஎல் தொடரில் விளையாடிய வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், அமித் மிஸ்ரா, சஹா உள்ளிட்ட வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் நடப்பு ஐபிஎல் தொடரை தற்காலிகமாக பிசிசிஐ ஒத்தி வைத்தது. மேலும் எஞ்சிய போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்றும் தெரிவித்தது.

RCB Adam Zampa gets married to his longtime girlfriend

இந்த நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர் ஆடம் ஜாம்பா தனது நீண்ட நாள் காதலியான ஹட்டி லே பால்மர் (Hattie Leigh Palmer) என்பவரை திருமணம் செய்துள்ளார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக ஏற்கனவே 2 முறை இவர்களது திருமணம் தள்ளி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by KATE WILLA (@kate_willa)

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. RCB Adam Zampa gets married to his longtime girlfriend | Sports News.