காலையில 4:30 க்கு WAKEUP.. "என் கையால சமைச்சு.." 90 வயதில் சல்யூட் போட வைத்த 'GRANDMA'!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்த உலகில், பல இடங்களில் ஏதாவது மோசமான அல்லது அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நிகழ்வதை நாம் அதிகம் கேள்விப்பட்டிருந்தாலும், அவ்வபோது சில நல்ல விஷயங்கள் தொடர்பான செய்திகள் கூட நம்மை மெய்சிலிர்க்க வைக்கும்.
அந்த வகையில், சுமார் 90 வயது மூதாட்டி, தினம் தோறும் செய்து வரும் காரியம் ஒன்று நெட்டிசன்கள் பலரையும் மனமுருக வைத்துள்ளது.
நம்மில் பலருக்கும் நாய், பூனை குட்டி உள்ளிட்ட செல்ல பிராணிகள் மீது அலாதி பிரியம் இருக்கும். நமது நாள் முழுவதும் அவர்களுடன் நிறைய நேரத்தை கழிக்க வேண்டும் என்று கூட நினைப்போம்.
ஆனால், 90 வயதான கனக் என்னும் மூதாட்டிக்கு நாய் என்றாலே பிடிக்காமல் இருந்து வந்துள்ளது. அப்படி இருக்கும் நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது பேத்தி சனா, வீட்டிற்கு நாய்க்குட்டி ஒன்றையும் வாங்கி வந்துள்ளார். ஆரம்பத்தில் அதனை சுத்தமாக வெறுத்து வந்த மூதாட்டி கனக், மெல்ல மெல்ல நாய்க்குட்டி செய்யும் காரியத்தின் காரணமாக ஈர்க்கப்பட்டு, அதனை நேசிக்கவும் தொடங்கியுள்ளார்.
இதன் பின்னர், நாட்கள் செல்ல செல்ல அதற்கு உணவு கொடுப்பதும் அதனுடன் விளையாடுவதுமாகவும் கனக் இருந்து வந்துள்ளார். இதன் பின்னர், அந்த மூதாட்டியின் வாழ்வில் ஒரு அங்கமாகவே அந்த நாய்க்குட்டி மாறி இருந்தது. இதனைத் தொடர்ந்து நாய்கள் மீது ஒருவித அன்பும் கனக்கிற்கு உருவாகி உள்ளது. அவரது பேத்தியான சனா, தெரு நாய்களுக்கு தினந்தோறும் காலையில் எந்திரித்து உணவு தயார் செய்து வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அப்படி ஒரு சூழ்நிலையில், பேத்தியுடன் இணைந்த சனா, தினந்தோறும் அதிகாலையில் 4:30 மணிக்கு எழுந்து, சுமார் 120 நாய்களுக்கு வித விதமாக உணவு தயார் செய்து கொடுத்து விடுகிறார்.
நாய் மீது வெறுப்பில் இருந்த கனக்கிற்கு, திடீரென அன்பு உருவாகவே, அதன் பின்னர் தினந்தோறும் தெரு நாய்களுக்கு உணவு வழங்கி வரும் சம்பவம், பலரையும் நெகிழ வைத்துள்ளது.
இது தொடர்பாக பேசும் கனக்கின் பேத்தி சனா, தனது பாட்டியான கனக்கிற்கு உடலில் ஏராளமான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், இருந்த போதும் காலையில் சுமார் 4:30 மணிக்கு எந்திரித்து 120-க்கும் மேற்பட்ட நாய்களுக்காக உணவு தயார் செய்து வருகிறார் என்றும் கூறியுள்ளார். மேலும் கனக் தயார் செய்த உணவினை, தெரு நாய்கள் உண்ணும் வீடியோவை கண்டும் கனக் மகிழ்வதாக சனா குறிப்பிட்டுள்ளார்.
ஒருமுறை கனக்கை அழைத்து கொண்டு நாய்களுக்கு அவர் கைகளால் உணவு கொடுத்த வீடியோ ஒன்றையும் சனா வெளியிட்டுள்ளார்.
Also Read | இட்லி முதல் இத்தாலி வரை... செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு வழங்கப்படும் உணவுகள்.. அடேங்கப்பா இவ்வளவு வகைகளா..?