"சோனமுத்தா போச்சா..." 'ஆஸ்திரேலிய வீரர்களால் ட்விட்டரில் முட்டிக் கொண்ட 'ஐபிஎல்' அணிகள்...' 'வைரல்' சம்பவம்!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி சிட்னியில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், டாஸ் வென்று பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்தது.
அந்த அணியின் பின்ச், ஸ்மித் ஆகியோர் சதமடித்து அசத்தினர். வார்னர் 69 ரன்கள் எடுத்தார். அதே போல, ஆஸ்திரேலிய அணி வீரர் மேக்ஸ்வெல், 19 பந்துகளில் 3 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியில் இடம்பெற்றிருந்த மேக்ஸ்வெல், ஒரு போட்டியில் கூட சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இந்நிலையில், தனது அணிக்காக களமிறங்கிய முதல் போட்டியிலேயே இந்திய பந்து வீச்சாளர்கள் வீசிய பந்துகளை சிதறடித்தார். இதனால், கிரிக்கெட் ரசிகர்கள் பல மேக்ஸ்வெல் தொடர்பாக பல மீம்ஸ்களை பறக்க விட்டனர். பஞ்சாப் அணியின் கேப்டனாக கே.எல் ராகுல் செயல்பட்டிருந்த நிலையில், பஞ்சாப் அணியின் பேட்டிங் பயிற்சியாளர் வாசிம் ஜாஃபர், மேக்ஸ்வெல் பேட்டிங்கை பார்க்கும் போது ராகுல் இப்படி தான் இருந்திருப்பார் என புகைப்படத்துடன் பதிவு ஒன்றை ட்விட்டரில் போட்டுள்ளார்.
.@klrahul11 behind the stumps right now#Maxwell #AUSvIND pic.twitter.com/R2EO0872uv
— Wasim Jaffer (@WasimJaffer14) November 27, 2020
Glenn Maxwell hitting sixes. 👀
Ki haal hai, @lionsdenkxip? 😛#AUSvIND
— Rajasthan Royals (@rajasthanroyals) November 27, 2020
அதே போல, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில், மேக்ஸ்வெல் பேட்டிங்கை குறிப்பிட்டு பஞ்சாப் அணியை கிண்டல் செய்வது போன்று பதிவு ஒன்றை போட்டுள்ளது. இதற்கு பதிலடியாக பஞ்சாப் அணியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்தும் பதிவு ஒன்று போடப்பட்டது. அதில் ராஜஸ்தான் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், இன்று சதமடித்ததை குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது.
Smith’s scored a 💯 off 62 🤭#KXIP admin #RR admin
🤝
Pain#SaddaPunjab #AUSvIND https://t.co/Sec2zCUP5Q
— Kings XI Punjab (@lionsdenkxip) November 27, 2020
After seeing Maxwell's inning
Kl Rahul ......#INDvsAUS #Maxwell pic.twitter.com/N0vhDAQs1q
— Jit Dadhaniya (@DadhaniyaJit) November 27, 2020
RCB and KXIP fans after watching Finch and Maxwell bat today #INDvsAUS pic.twitter.com/ywhJenirtp
— Lucifer (@Lost_Poet_) November 27, 2020
கடந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. அதை கிண்டல் செய்து தான் பஞ்சாப் அணி ட்வீட் செய்துள்ளது. பெங்களூர் அணியில் இடம்பெற்றிருந்த பின்ச், பெரிய அளவில் ஐபிஎல் தொடரில் ஜொலிக்காமல் இருந்த நிலையில் இன்றைய போட்டியில் சதமடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.