'3 லட்சம்' பேர் உயிரிழக்கலாம்... 'அடுத்த' கொரோனா மையமாக மாறும் 'அபாயத்தில்' உள்ள 'நாடுகள்'... உலக சுகாதார அமைப்பு 'எச்சரிக்கை'...
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்பிரிக்க நாடுகளில் தொடர்ந்து பாதிப்பு அதிகரித்து வருவதால் ஆப்பிரிக்கா அடுத்த கொரோனா மையமாக மாறும் அபாயமுள்ளதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது .
ஆப்பிரிக்கா முழுவதும் இதுவரை சுமார் 19000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 1000 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் இதுகுறித்துப் பேசியுள்ள உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்காவுக்கான இயக்குனர், "தென் ஆப்பிரிக்கா, நைஜீரியா, ஐவரி கோஸ்ட், கேமரூன், கானா ஆகியவற்றின் முக்கிய நகரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அங்கு மருத்துவ வசதிகளோ, தேவையான உபகாரணங்களோ இல்லை. அத்துடன் வெண்டிலேட்டர் வசதி இல்லாதது மற்றும் சமூக விலகலை முறையாக கடைபிடிக்காதது ஆகியவற்றால் அங்கு கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது" எனத் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு மட்டும் ஆப்பிரிக்காவில் 3 லட்சம் பேர் உயிரிழக்க நேரிடுமென கூறப்பட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.