'கொரோனா' தொற்றிலிருந்து 'மருத்தவர்களை' காக்கும்... 'ஏரோசல் பெட்டிகள்...' நோய் பரவலை எப்படி தடுக்கிறது தெரியுமா?...
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து, சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களுக்கு தொற்று பரவாமல் இருப்பதற்காக, 'ஏரோசல் பாக்ஸ்' எனப்படும், கண்ணாடிப் பெட்டிகளை, மத்திய அரசு நிறுவனமான, எச்.ஏ.எல்., எனப்படும், 'ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ்' நிறுவனம் தயாரித்து வருகிறது.

சிகிச்சை பெறும் நோயாளிகளின் முகத்தை, இந்த பெட்டியால் முழுவதுமாக மறைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளிப்பதன் மூலம், மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தவிர்க்கப்படுகிறது. ஒரு நோயாளியிடமிருந்து வைரஸ் பரவுவதைத் தடுக்க இது சிறந்த வழிமுறை என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தினாலே இந்த நோயை அடியோடு அளித்து விட முடியும் என்பதால் இதுபோன்ற தடுப்பு நடவடிக்கைகளில் மருத்துவர்கள் தீவிரம் காட்டி வருகின்றர்.
தற்போது எச்.ஏ.எல்., நிறுவனம் சார்பில், 300க்கும் மேற்பட்ட ஏரோசல் பெட்டிகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இவை, கர்நாடகா, உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
