'டிக்டாக்கிலிருந்தும்'.. 'கொரோனாவிலிருந்தும்' மீண்டு டிஸ்சார்ஜ்!! ஓவியம், கவிதை என மனதை செலுத்திய பெண்!.. பரிசு கொடுத்து அனுப்பிய மருத்துவர்கள்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 17, 2020 11:54 PM

சென்னை வேளச்சேரி ஃபீனிக்ஸ் மாலில் பணிபுரிந்தபோது கொரோனா தொற்றுக்குள்ளான  இளம் பெண் ஒருவர் அரியலூர் மருத்துவமனையில் கொரோனா வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

ariyalur tiktok girl discharged from corona ward who worked in phoenix

ஆனால் சிகிச்சையில் இருக்கும்போதே மன ஆறுதலுக்காக  தொடர் சோகப்பாடல்களுக்கும் கொரோனா பற்றிய பாடல்களுக்கும் டிக்டாக் செய்துகொண்டிருந்த இந்த பெண்ணின் பொனை வாங்கி பார்த்த மருத்துவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியதாகவும் அதனால் டிக்டாக் மோகத்தில் இருந்து மீண்ட அந்த இளம் பெண் தனது பாணியை மாற்றிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

பின்னர் கவிதைகள், ஓவியங்கள், எம்பிராய்டிங் போடுதல் உள்ளிட்டவற்றை செய்து பொழுதை போக்கியுள்ளார். பின்னர் அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று குணமாகியதை அடுத்து, அவர் தான் கொரோனாவில் இருந்து குணமாக உதவிய மருத்துவர்களுக்கு நன்றி சொல்லி டிக்டாக் பதிவிட்டார். அவருக்கு பரிசுகள் கொடுத்தும் கைத்தட்டி உற்சாகப்படுத்தியும் வாழ்த்து தெரிவித்த மருத்துவமனை ஊழியர்களும் கொரோனா தடுப்பு பிரிவு சுகாதார அதிகாரிகளும் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.