“டிக்டாக் மோகத்தால் சிக்கிய இந்த இளைஞரை நியாபகம் இருக்கா?”.. ‘இப்பவும் டிக்டாக்கை விடல.. ஆனா’.. நெகிழவைத்த காவல் ஆய்வாளர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 17, 2020 11:01 PM

திடீரென தோன்றி பரபரப்பை உருவாக்கி புதுப்பேட்டை பேருந்து நிலையம், திருச்சி ரயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் மக்களிடையே அச்சுறுத்தலை உருவாக்கி டிக்டாக் செய்து வீடியோக்களை வெளியிட்டவர் கண்ணன்.

youth comes out from tiktok addiction and does corona awareness

புதுக்கோட்டை அருகே தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு இளநிலை படிப்பு படித்து வந்த கண்ணன் பொதுமக்களுக்கு இடையூறு செய்ததாக வடக்காடு போலீஸாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் டிக்டாக் மோகத்தால் இப்படி செய்துவிட்டதாகவும், இனி இப்படி செய்ய மாட்டேன் என்று காவல் ஆய்வாளர் பரத் ஸ்ரீனிவாசனிடம் கண்ணீர் விட்டு கதறினார்.

மனமிறங்கிய அந்த மனிதநேயமிக்க காவல் ஆய்வாளர், கண்ணனை மன நல ஆலோசகரிடம் அனுப்பி அவரை நன்முறையில் மாற்றியுள்ளார். கண்ணன், தற்போது ஃப்ரண்ட்ஸ் ஆப் போலீஸில் சேர்ந்து கொரோனா விழிப்புணர்வு முகாம்களில் மக்களுக்கு சேவை செய்துகொண்டு, சமூக செயற்பாட்டாளராக வலம் வருகிறார். ஆனால் டிக்டாக்கை விடாத கண்ணன், அதே டிக்டாக்கில் கொரோனா விழிப்புணர்வை அளித்து வருகிறார்.