‘மேலும் 56 பேருக்கு கொரோனா! மொத்த எண்ணிக்கை 1,323 ஆக உயர்வு!’.. ‘ஒரே நாளில் குணமடைந்த 103 பேர்!’.. முழு விபரம் உள்ளே!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Apr 17, 2020 07:27 PM

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

New Corona Positive cases in TN, Toll rises April 17 update

தமிழகத்தில் மேலும் 56 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,323ஆக உயர்ந்துள்ளது. 

இன்று ஒரே நாளில் 103 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 180லிருந்து 283ஆக உயர்ந்துள்ளது. 

சென்னையில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா உறுதியானதால் பாதிப்பு 228ஆக அதிகரித்துள்ளது.