‘காதலியை பாஸ் பண்ண வைக்க முயற்சித்து, கைதான பிரபல கட்சியின் பிரமுகர்..!’
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Saranya | May 28, 2019 10:26 PM
காதலிக்காக எம்பிஏ தேர்வுத்தாளை லீக் செய்ய முயற்சித்ததாக உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சி பிரமுகர் பெரோஸ் ஆலம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பெரோஸ் தனது காதலிக்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் தேர்வுத்தாளை லீக் செய்ய அதன் ஊழியர் இர்சாத் என்பவரை அணுகியுள்ளார். அப்படி செய்தால் அதற்கு பதிலாக அவருக்கு நிரந்தரப் பணி ஆணையைப் பெற்றுத் தருவதாக ஆசை காட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் வெளியே வர விசாரணை செய்த போலீசார், பெரோஸ் ஆலம், இதற்கு உதவிய அவரது நண்பர் ஹைதர் மற்றும் அலிகார் பல்கலைக் கழக ஊழியர் ஆகியோரைக் கைது செய்துள்ளனர். பெரோஸின் காதலி தறைமறைவாகி உள்ளார்.
இந்த கும்பல் வாட்ஸ்அப்பில் நுழைவுத்தேர்வு மாணவர்களுக்கென குரூப் உருவாக்கி ஒரு பதிலுக்கு 2000 ரூபாய் என பல மாணவர்களுக்கு விற்றுள்ளதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்த மோசடி விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.