"அலட்டிக்காம.. அசால்டா.. ஒத்த கைல கூலா ஒரு CLICK.." VIRAL ஆகும் சேலம் WEDDING PHOTOGRAPHER பாட்டி..
முகப்பு > செய்திகள் > தமிழகம்டிஜிட்டல் யுகத்திற்கேற்ப நம்மைச் சுற்றியுள்ள அனைத்து விஷயங்களும் அப்டேட் ஆகிக் கொண்டே இருக்கிறது.

அந்த வகையில், போட்டோகிராஃபி துறையின் முன்னேற்றம் என்பதும் மிகப் பெரிய ஒன்று தான். நாளுக்கு நாள், புது விதமான டெக்னாலஜி உருவாவது மட்டுமில்லாமல், திருமணம், வீட்டு விஷேசம் என பல நிகழ்ச்சிக்கும் போட்டோகிராஃபி என்பது இன்றியமையாத ஒன்றாகி விட்டது.
புகைப்பட கலைஞர்கள்
அப்படி பல விஷேச நிகழ்ச்சிகளில் எடுக்கப்படும் வித்தியாசமான புகைப்படங்கள், இணையத்தில் அடிக்கடி வைரல் ஆவதையும் பார்த்திருப்போம். இதற்கு மிக முக்கிய காரணம், அதற்கு பின்னால் உள்ள புகைப்பட கலைஞர்கள் தான். அப்படி ஒரு வேற லெவல் புகைப்பட கலைஞரை குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.
கேமராவுடன் வலம் வந்த பாட்டி
சேலம் பகுதியில் உள்ள கோவில் ஒன்றில் வைத்து, திருமணம் நடைபெறவே அப்போது கேமராவுடன் திரிந்த மூதாட்டி ஒருவர், புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு நின்றது தொடர்பான வீடியோ தான், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
சேலம் பகுதியில் அமைந்துள்ள சின்ன திருப்பதி கோவிலில் வைத்து இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், புதிதாக திருமணமான ஜோடி ஒன்று, அங்கே கையெழுத்து போட்டுக் கொண்டு நிற்கின்றனர். அப்போது, மணமக்களை சுற்றி அவர்களின் குடும்பத்தினரும் அங்கே நிற்க, வலது புறம் கேமராவுடன் நின்ற பாட்டி தான், தற்போது இணையவாசிகளின் பேசு பொருளாக மாறி உள்ளார்.
அதுவும் ஒத்தை கையில..
அது மட்டுமில்லாமல், மணமக்கள் கையெழுத்து போடுவதை ஒற்றைக் கையில் அவர் ஃபோட்டோ எடுப்பது தான் இந்த வீடியோவின் ஹைலைட்டாக பார்க்கப்படுகிறது. இது தொடர்பான வீடியோ ஒன்றை தற்போது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒருவர் வெளியிட்டுள்ள நிலையில், நெட்டிசன்கள் அந்த பாட்டியை பாராட்டி கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
அதே போல, வயது என்பது எந்த ஒரு விஷயத்துக்கும் தடையில்லை என்பதை இந்த மூதாட்டி நிரூபித்துள்ளார் என்றும் நெட்டிசன்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
