வயசாகிடுச்சு... இனி 'அவ்ளோ' தான் முடிச்சுக்குவாரு ... 'கோச்சை' வச்சு செய்யும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 09, 2020 10:29 PM

இந்திய கிரிக்கெட் அணியின் கூல் கேப்டன் என பெயரெடுத்த தோனி உலகக்கோப்பை போட்டிகளுக்குப் பின், எந்தவொரு போட்டியிலும் விளையாடவில்லை. இதனால் அவர் அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் விரைவில் ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

MS Dhoni may soon end ODI career says Ravi Shastri

இதற்கிடையில் இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தோனி ஒருநாள் போட்டிகளில் இருந்து விரைவில் ஓய்வு பெறுவார் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,'' சமீபத்தில் நான் தோனியிடம் பேசினேன். டெஸ்ட் கேரியரை போல, ஒருநாள் கிரிக்கெட்டையும் விரைவில் முடித்துக் கொள்வார்.

தற்போது அவரது வயதில் டி20 கிரிக்கெட் போட்டியில் மட்டுமே விளையாட விரும்பலாம். ஐபிஎல் தொடரில் விளையாடும்போது அவரது உடல் எப்படி ஒத்துழைக்கிறது என்பதை பார்க்க வேண்டும். ஒரு விஷயம் எனக்கு தெரியும், அது என்னவென்றால், அவராகவே அணிக்கு திரும்ப நினைக்கமாட்டார். ஆனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினால், டி20 போட்டிகளில் விளையாடலாம்,'' என்றார்.

ரவி சாஸ்திரியின் இந்த பேச்சுக்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நீங்கள் எப்போது இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து விலகுவீர்கள்? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.