'நிலச்சரிவு' நடந்த பகுதியில் 'சுற்றித்' திரியும் 'நாய்'... "எது குடுத்தாலும் சாப்பிடாம வேதனையோட சுத்திட்டு இருக்கு"... மனதை உறைய வைக்கும் 'சோகம்'!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாகேரளா மாநிலம் இடுக்கி மாவட்டத்தை அடுத்த பெட்டிமுடி என்னும் மலைக்கிராம பகுதியில், கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த கடும் மழை காரணமாக, நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த விபத்தில் சுமார் 80 பேர் வரை மண்ணில் புதைந்துள்ளதாகவும், அதில் இதுவரை சுமார் 40 பேரின் உடல்களை மீட்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் பலர் மண்ணிற்கு அடியில் சிக்கிக் கொண்டிருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக அப்பகுதியில் மீட்புப் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், நாய் ஒன்று அங்குமிங்குமாக சுற்றி தன்னை பாசத்துடன் வளர்த்தவர்களை தேடி கொண்டிருக்கிறது.
அங்கு கிடக்கும் துணிகளை மோப்பம் பிடித்து தன்னை வளர்த்தவர்கள் இருக்கிறார்களா என்பதை அறிய முயன்று வருகிறது. அது மட்டுமில்லாமல், யாராவது உணவளித்தால் கூட அதனை உண்ண மறுப்பதாக அப்பகுதியில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் நபர்கள் கூறுகிறார்கள். பல வருடங்களாக தன்னை அன்புடன் வளர்த்தவர்களை திடீரென பிரிந்ததன் காரணமாக நாய் மிகவும் சோகத்துடன் அப்பகுதியில் சுற்றித் திரிவதாக அங்குள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.

மற்ற செய்திகள்
