'இன்னும் 15 நாளில் நடக்க இருந்த சந்தோசம்'... 'ரொம்ப நாள் ஆசைப்பட்டது இதுக்கு தான்'... 'மொத்தமா நொறுங்கி போச்சே'... துணை விமானியின் உருகவைக்கும் பக்கங்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகோழிக்கோடு விமான விபத்து இந்தியா மட்டுமல்லாது உலகத்தையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஏற்கனவே கொரோனாவால் மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில் இந்த விபத்து மக்களின் மனதில் பெரும் இடியாய் இறங்கியுள்ளது. பலரது உயிரைக் காப்பாற்றிய விமானிகள் குறித்து பல்வேறு நெகிழ வைக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்விளைவாக விமானச் சேவை உள்ளிட்ட அனைத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் படிப்பு மாற்றும் வேலை தொடர்பாக வெளிநாடுகளுக்குச் சென்ற பல இந்தியர்கள் பல நாடுகளில் சிக்கியுள்ளார்கள். இவர்களை மீட்டு சொந்த நாட்டிற்கு அழைத்து வரும் விதமாக வந்தே பாரத் திட்டத்தின் கீழ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாயிலிருந்து 174 பயணிகள், 10 குழந்தைகள், 5 விமான ஊழியர்கள், 2 விமானிகள் என மொத்தம் 191 பேருடன் கேரளாவிற்கு வந்தது.
இதில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்தில் சிக்கி இரண்டாக உடைந்தது. இந்த கோர விபத்தில் சிக்கி விமானி, துணை விமானி உள்பட இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 100-க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் விமானி தீபக் வசந்த் சதே, இந்திய விமானப் படையின் போர் விமானத்தின் விமானியாக பணிபுரிந்த அனுபவம் கொண்டவர். தற்போது துணை விமானி அகிலேஷ் குமார் குறித்துப் பல நெகிழ்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த மே 8ம் தேதி இதே விமான நிலையத்தில் 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களைத் தாய் நாட்டிற்கு அழைத்து வந்ததற்காகக் கைதட்டி வரவேற்கப்பட்டார்.
ஆனால் நேற்று அதே விமான நிலையத்தில் அகிலேஷ் குமார் உயிரிழந்தது தான் சோகத்தின் உச்சம். 32 வயதான அகிலேஷ் குமார் உத்திர பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர். இவருக்கு 2 சகோதரர்களும் ஒரு சகோதரியும் உள்ளனர். கடந்த 2017ம் ஆண்டு மேஹா என்ற பெண்ணுடன் அகிலேஷ் குமாருக்குத் திருமணம் நடைபெற்றது. ஊரடங்கிற்கு முன்பாக தனது சொந்த ஊருக்குச் சென்று குடும்பத்தைச் சந்தித்து விட்டுத் திரும்பிய அகிலேஷ் அதன்பிறகு அவர்களைச் சந்திக்க முடியவில்லை. 2017ம் ஆண்டு முதல் ஏர் இந்தியா விமானங்களை இயக்கி வரும் அகிலேஷ், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இந்தியர்களை அழைத்து வரும் பணிகளை மேற்கொண்ட முதல் ஏர் இந்தியா விமானி ஆவர்.
தற்போது அவரது மனைவி மேஹா கர்ப்பமாக இருக்கும் நிலையில், இன்னும் 15 நாட்களில் அவருக்குப் பிரசவம் நடக்கவிருக்கிறது. தனது குழந்தையைப் பார்க்க வேண்டும், அந்த பிஞ்சு கைகளைப் பிடிக்க வேண்டும் என்ற ஆசையிலிருந்த அகிலேஷ் குமாரின் கனவு தகர்ந்து போனது தான் சோகத்தின் உச்சம். தனது குழந்தையைப் பார்க்க வேண்டும் என்று தான் அகிலேஷ் மிகவும் ஆசையாகவும், விருப்பத்துடனும் காத்திருந்ததாக அவரது சகோதரர் கூறியுள்ளார். கடந்த மே 8ம் தேதி ஹீரோவாவாக கைதட்டி வரவேற்கப்பட்ட அகிலேஷ் குமார், இன்று பல உயிர்களைக் காப்பாற்றி நிஜ ஹீரோவாகவே மாறியுள்ளார். அவரின் ஆன்மா சாந்தியடையட்டும்.
Hero's welcome late last night for Air India Express Kozhikode-Dubai-Kozhikode #VandeBharatMission commander Capt Michale Saldanha, first officer Capt Akhilesh Kumar with cabin crew members Vineet Shamil, Abdul Rouf, Raseena P & Rijo Johnson. pic.twitter.com/asKvX9kQYw
— Manju V (@ManjuVTOI) May 8, 2020