“குழந்தைங்க தூக்கி வீசப்பட்டாங்க.. பயங்கர அலறல் சத்தம்.. என்ன நடக்குதுனு புரியுறதுக்குள்ள”... கோழிக்கோடு விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் பகிரும் அதிர்ச்சி தகவல்கள்!
முகப்பு > செய்திகள் > இந்தியாதுபாயிலிருந்து 191 பேருடன் கேரளாவுக்கு புறப்பட்டு வந்த விமானம் கோழிக்கோடு விமான நிலையத்தில் கோர விபத்துக்குள்ளானது. விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி ஒரு பள்ளத்தில் பாய்ந்து இரண்டாக உடைந்ததை அடுத்து விமானி உட்பட 17 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களின் நேரடி அனுபவங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.

அந்த வகையில் கோழிக்கோடு எலாத்தூரை சேர்ந்த ஜூனாயத் என்கிற 25 வயது நபர் விபத்து ஏற்படுவதற்கு முன்பு மிகப்பெரும் சத்தம் ஏற்பட்டதாகக் கூறுகிறார். இதுபற்றி அவர் கூறுகையில், “வெகு சாதாரணமாகதான் நாங்கள் விமானத்தில் இருந்தபடி தரையிறங்கி இருந்தோம். முதல் விமானம் தரையிறங்க முயற்சித்தது பின்னர் மீண்டும் புறப்பட்டது. தரை இறங்குவதற்கான இரண்டாவது முயற்சியில்தான் இந்த விபத்து நிகழ்ந்தது. அப்போது விமானத்தின் வேகம் அதிகமாகவே இருந்தது. ஆனால் என்ன நடக்கிறது என்பதை நாங்கள் உணர்வதற்கு முன்பாகவே அது ஓடுபாதையில் இருந்து விலகி ஓடி இரண்டாக பிளந்தது” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் விமானத்தின் பின் இருக்கையில் அவர், அமர்ந்து இருந்ததாகவும் அவருக்கு முன் பகுதியில் வந்தவர்கள் பலருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதாகவும், ஏதோ தன் தலை மீது மோதியதாகவும், ஆனால் காயம் இல்லாமல் தப்பித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் சில குழந்தைகள் இருக்கைகளில் இருந்து வெளியே விழுந்து விட்டதாகவும் தன்னுடைய துயரமான நினைவுகளை தெரிவித்துள்ளார். துபாயில் கணக்காளராக பணியாற்றும் அவருக்கு கொரோனா காரணமாக நீண்ட விடுமுறை அளிக்கப்பட்டதை அடுத்து அவர் வீடு திரும்பியுள்ளார்.
இந்த கோர நினைவிலிருந்து தன்னால் மீள முடியவில்லை என்றும் தன் இருக்கையை கெட்டியாக பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்ததாகவும், அத்தனை அலறல் சத்தங்கள் கேட்டதாகவும், தான் பாதுகாப்பாக மீட்கப்பட்டதையே தன்னால் நம்ப முடியவில்லை என்றும் அவற்றின் தாக்கத்திலிருந்து விடுபடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
